நில அளவை / நில ஆவணங்கள் தொடர்பான இணையவழிச் சேவைகளின் விவரங்கள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 05, 2024

Comments:0

நில அளவை / நில ஆவணங்கள் தொடர்பான இணையவழிச் சேவைகளின் விவரங்கள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!



நில அளவை / நில ஆவணங்கள் தொடர்பான இணையவழிச் சேவைகளின் விவரங்கள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!

பட்டா மாறுதல்,நில அளவைக்கு எந்த வெப்சைட்டில் விண்ணப்பிக்கனும் தெரியுமா.?

தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

நில ஆவணங்கள், நில அளவைகள் தொடர்பான இணையவழிச்சேவைக்கான வெப்சைட் முகவரியை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன் படி பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிப்பது, நில உரிமைதாரர்கள் புல எல்லைகள் அளந்து காட்ட விண்ணப்பிப்பதற்கான இணையதள முகவரி வெளியிடப்பட்டுள்ளது. *இணையவழிச்சேவைகள்.*

பட்டா மாறுதல், நில உரிமைதாரர்கள் புல எல்லைகளை அளந்து  காட்டக்கோருவது தொடர்பான இணையவழி முகவரியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக    நிலஅளவை (ம) நிலவரித்திட்டம் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கடந்த சில ஆண்டுகளில்,

பல்வகையான நில ஆவணங்கள் கணினிப்படுத்தப்பட்டு இணையவழியில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

நில உரிமைதாரர்கள் பயனடையும் வகையில் கீழ்க்காணும் இணையவழிச்சேவைகள் நிலஅளவை மற்றும் நிலவரித்திட்டத் துறையால் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.

*பட்டா மாறுதல்களுக்கு*

பட்டா மாற்றத்திற்கு இணையவழி மூலம் விண்ணப்பித்தல்:

கிராமப்புறம், நகர்ப்புறம் மற்றும் நத்தம் ஆகிய பகுதிகளுக்கான பட்டா மாற்றம் மேற்கொள்ள https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

நில உரிமைதாரர்கள் புல எல்லைகளை அளந்து அத்து காட்டக்கோருவதற்கு (F-Line Measurement) https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். *ஆவணங்கள் பதிவிறக்கம் செய்ய*

எங்கிருந்தும் எந்நேரத்திலும்  (Anytime Anywhere) என்ற இணையவழிச்சேவையினை (https://eservices.tn.gov.in) பயன்படுத்தி, கிராமப்புற மற்றும் நத்தம் நில ஆவணங்களின் பட்டா / சிட்டா , ‘அ’ பதிவேடு மற்றும் புலப்படம் ஆகியவற்றையும், நகர்ப்புற நிலஅளவைப் பதிவேட்டின் நகல்,

நகர நில அளவை வரைபடம் மற்றும் புல எல்லை வரைபடம் / அறிக்கை  (F-Line report ) ஆகியவற்றையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மற்றும் பட்டா மாற்றத்திற்கு அளித்த விண்ணப்பத்தின் நிலையினை அறிந்து கொள்ளலாம்.

கிராம வரைபடங்கள் மற்றும் பழைய நிலஅளவை எண்களுக்கான புதிய நிலஅளவை எண்களின் ஒப்புமை விளக்கப்பட்டியல் (Correlation Statements) போன்றவற்றை https://tnlandsurvey.tn.gov.in எனும் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குறிப்பு- வரிசை எண் 1 மற்றும் 2-ல்  உள்ள சேவைகளை தங்கள் அருகிலுள்ள பொதுச்சேவை மையங்கள் (Common Service Centres (CSC)) மூலமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு கூறியுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD Press Release 919 PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews