பள்ளிகளில் குளிர்சாதன வசதி வழங்கப்பட்டால் பெற்றோர்களே செலவை ஏற்க வேண்டும்: டெல்லி உயர் நீதிமன்றம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 06, 2024

Comments:0

பள்ளிகளில் குளிர்சாதன வசதி வழங்கப்பட்டால் பெற்றோர்களே செலவை ஏற்க வேண்டும்: டெல்லி உயர் நீதிமன்றம்

IMG_20240506_063718_005
பள்ளிகளில் குளிர்சாதன வசதி வழங்கப்பட்டால் பெற்றோர்களே செலவை ஏற்க வேண்டும்: டெல்லி உயர் நீதிமன்றம்

பள்ளி வகுப்பறைகளில் குளிர்சாதன வசதி வழங்கப்படும்பட்சத்தில், அதற்கான தொகையை பெற்றோர்கள்தான் செலுத்த வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெருநகரங்களில் சில பள்ளிகளில் வகுப்பறைகளில் ஏசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களிடம் கல்விக் கட்டணம், ஆய்வகக் கட்டணம் வசூலிப்பதுபோல் ஏசி கட்டணமாக மாதம் கணிசமான தொகையை அப்பள்ளிகள் வசூலிக்கின்றன. டெல்லியில் ஒரு தனியார் பள்ளி நிர்வாகம், மாணவர்களிடம் ஏசி கட்டணமாக மாதம் ரூ.2,000 வசூலித்து வந்துள்ளது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் பெற்றோர் ஒருவர் பொதுநல வழக்குத் தாக்கல் செய்தார். இம்மனுவை தலைமை நீதிபதி மன்மோகன் தலைமையிலான அமர்வு விசாரித்தது. பள்ளியில் ஏசி வசதி வழங்கப்படும்பட்சத்தில் அதற்கான கட்டணத்தை பெற்றோர்கள்தான் கொடுக்க வேண்டும். ஆய்வக வசதி, ஸ்மார்ட் வகுப்பறை வசதி உள்ளிட்டவற்றுக்கு தனியாக கட்டணம் செலுத்துவதுபோல், ஏசிக்கும் கட்டணம் செலுத்த வேண்டும்.

இதற்கான செலவை பள்ளி நிர்வாகத்தின் மீது சுமத்த முடியாது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான பள்ளியை தேர்ந்தெடுக்கும்போது இந்தக் கட்டணங்கள் குறித்து புரிதலோடு இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84726455