போலி பல்கலைகள் பட்டியல் - யுஜிசி வெளியீடு! - மாணவர்களே உஷார். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 20, 2024

Comments:0

போலி பல்கலைகள் பட்டியல் - யுஜிசி வெளியீடு! - மாணவர்களே உஷார்.



போலி பல்கலைகள்: மாணவர்களே உஷார்

நாடு முழுதும் பல்கலை மானியக்குழு அங்கீகாரம் இன்றி செயல்படும் போலி பல்கலை பட்டியல், யு.ஜி.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தேசிய அளவில் 21 பல்கலைகள் போலி பல்கலையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில், ஆந்திராவில் 2, டில்லியில் 8, கர்நாடகா, மஹாராஷ்டிரா மற்றும் புதுச்சேரியில் ஒரு பல்கலை வீதமும், உத்தர பிரதேசத்தில் 4, மேற்கு வங்கத்தில் 2, கேரளாவில் 2 உட்பட, 21 பல்கலைக் கழகங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தில் எந்த பல்கலையும் இப்பட்டியலில் இல்லை.

பிற மாநிலங்களில் படிப்பிற்காக செல்லும் மாணவர்கள், இப்பட்டியலை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.

மேலும் விபரங்களை, https://www.ugc.gov.in/ எனும் யு.ஜி.சி., இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் - யுஜிசி வெளியீடு!

பல்கலைக்கழக மானியக்குழு அங்கீகாரத்தின் அனுமதியின்றி செயல்பட்டு வந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலை யுஜிசி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

அதன் மூலம் நாடு முழுவதும் 21 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று யுஜிசியால் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த பட்டியலில், தில்லியில் 8, உத்தரப்பிரதேசத்தில் 4, ஆந்திரா, மேற்கு வங்கம், கேரளத்தில் தலா 2-ம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் தலா 1 உட்பட மொத்தம் 21 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள எந்த பல்கலைக்கழகமும் இந்தப் பட்டியலில் இல்லை.

பிற மாநிலக் கல்லூரிகளில் படிக்க விண்ணப்பிக்க உள்ள மாணவர்கள் இந்தப் பட்டியலை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்களை யுஜிசியின் https://www.ugc.gov.in/ என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews