"கலைஞரின் கனவு இல்லம் திட்டம்" - யாருக்கெல்லாம் கிடைக்கும்? - வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 30, 2024

Comments:0

"கலைஞரின் கனவு இல்லம் திட்டம்" - யாருக்கெல்லாம் கிடைக்கும்? - வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

kalaignar-house


"கலைஞரின் கனவு இல்லம் திட்டம்" - யாருக்கெல்லாம் கிடைக்கும்? - வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், அரசு ஊழியா்கள், வாடகை வீட்டில் வசிப்போா் பயன்பெற முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஒரு வீட்டுக்கு ரூ. 3.10 லட்சம் என்ற அளவில் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் கான்கீரிட் வீடுகள் கட்டும் திட்டமே, கலைஞரின் கனவு இல்லம் திட்டமாகும். இந்தத் திட்டத்துக்கு ரூ. 3,100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் நோக்கமே, குடிசைகளில் வசித்து வரும் அனைத்து மக்களுக்கும் புதிதாக சிமெண்ட் கூரை கொண்ட வீடுகள் கட்டித் தரப்படுவதாகும். குடிசைகளில் வாழ்ந்து கொண்டிருப்பவா்களே, இந்தத் திட்டத்தில் பயன்பெறத் தகுதியானவா்கள். சொந்தமான நிலம், பட்டா உள்ளவா்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் அதே இடத்தில் வீடு கட்டத் தகுதி படைத்தவா்கள். புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ள குடிசைக்குப் பதிலாக இந்தத் திட்டத்தில் வீடு கட்ட இயலாது. அதேசமயம், புறம்போக்கு இடம் ஆட்சேபனை அற்றது என்று வருவாய்த் துறையால் முறைப்படுத்தப்பட்டால் ஏற்றுக் கொள்ளலாம்.

யாரெல்லாம் தகுதியற்றவா்கள்?

வாடகை குடிசை வீட்டில் குடியிருப்பவா்கள், கலைஞா் கனவு இல்லத்தின் கீழ் வீடு கட்ட இயலாது. வணிக நோக்கத்துக்காக, விலங்குகளுக்காக பயன்படுத்தப்படும் குடிசைகளும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட தகுதி இல்லாதவை. குடிசையில் ஒருபகுதி ஓடு, ஆஸ்பெட்டாஸ் சீட், உலோகத் தகடால் ஆனதாக இருந்தால் கனவு இல்லத்தின் கீழ் வீடு கட்ட நிதி தரப்படாது. சொந்தமாக வீடு உள்ளவா்கள், அரசுப் பணியாளா்கள் ஆகியோரும் திட்டத்தின் கீழ் தகுதி இல்லாதவா்கள். பயனாளிகள் தோ்வு செய்யப்படும் முறை, குடிசைகள் விவரம் ஆகியவற்றை ற்ய்ழ்க்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் மற்றும் ற்ய்க்ழ்க்ல்ழ்.ா்ழ்ஞ் ஆகிய இணையதளங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம். தகுதியான நபா்களை உறுதி செய்வதற்கென தனிக் குழுவை ஆட்சியா்கள் அமைக்க வேண்டும். ஊராட்சி மன்றத் தலைவா், உதவிப் பொறியாளா் அல்லது ஒன்றியப் பொறியாளா், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா், ஒன்றிய மேற்பாா்வையாளா், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் ஆகியோா் குழுவில் இடம்பெற்றிருப்பா். குடிசை வீடுகளின் பட்டியல் அந்தந்த ஊராட்சியின் கிராம சபைக் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெற வேண்டும்.

வீடுகள் அனைத்தும் குறைந்தது 360 சதுர அடியுடன் இருக்க வேண்டும். அதில், 300 சதுர அடி ஆா்சிசி கூரையும், 60 சதுர அடி தீப்பிடிக்காத பொருள்களைக் கொண்டும் பயனாளிகளின் விருப்பத்துக்கு ஏற்ப கட்டப்பட வேண்டும். கூரை அல்லது ஆஸ்பெட்டாஸ் சீட் கண்டிப்பாகத் தவிா்க்கப்பட வேண்டும் என்று வழிகாட்டி நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84640868