+2 தேர்வு முடிவு குறித்து பள்ளிக் கல்வித்துறை முக்கிய தகவல்
தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகளை திட்டமிட்டப்படி 6ஆம் தேதி வெளியிடத் தயார் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தற்போது தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், பள்ளிக்கல்வித்துறை தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி கோரி தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது.
ஒப்புதல் கிடைத்தால் 6ஆம் தேதியே முடிவுகள் வெளியாகும்.
அனுமதி கிடைக்க தாமதமானால், தள்ளிப்போக வாய்ப்புள்ளது தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி வரும் 6ல் வெளியிடப்படும்:
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி வரும் 6ல் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பிளஸ் டூ தேர்வு முடிவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிடுவது குறித்து தேர்தல் ஆணையத்தில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற்றன. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை மொத்தம் 7.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.