8ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி - பள்ளிக்கல்வி துறை உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 29, 2024

Comments:0

8ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி - பள்ளிக்கல்வி துறை உத்தரவு



8ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி - பள்ளிக்கல்வி துறை உத்தரவு

8ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி.

'பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, எட்டாம் வகுப்பு வரை, எந்த மாணவரையும் தேர்ச்சி பெறவில்லை எனக்கூறி, தேக்க நிலையில் வைக்கக் கூடாது; அனைவருக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன் அடிப்படையில், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

நடப்பு கல்வியாண்டில், 6, 7, 8, 9ம் வகுப்புகளுக்கு, தேர்வு முடிவுகள் வெளியிடுவது தொடர்பாக, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி, ஆங்கிலோ - இந்தியன், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் மற்றும் சிறப்பு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உரிய நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்புகளுக்கு, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறையின்படி, ஒருங்கிணைந்த பதிவேட்டில், மூன்றாம் பருவத்திற்குரிய மதிப்பெண்கள் மற்றும், 'கிரேடு'களை பதிவு செய்ய வேண்டும்.

எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, முழு ஆண்டு மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும்.

மாணவர்களின் இடைநிற்றலை தவிர்ப்பதற்காக, கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்துக்கு குறையாமல், ஒன்பதாம் வகுப்புக்கான தேர்ச்சி விதிகள்படி முடிவு செய்யப்பட்டு, தேர்ச்சி அளிக்கப்பட வேண்டும்.

அனைத்து பள்ளிகளும், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 6 ,7, 8ம் வகுப்புகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


According to the Right to Education Act, all students in classes 6, 7 and 8 have been ordered to pass கல்வி உரிமை சட்டத்தின்படி 6, 7, 8-ம் வகுப்புகளில் பயிலும் அனைவருக்கும் கட்டாய தேர்ச்சி வழங்க உத்தரவு

அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின்படி, 6, 7, 8-ம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ், அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

நடப்பு (2023-24) கல்வி ஆண்டில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் சுயநிதி பள்ளி, ஆங்கிலோ-இந்தியன் பள்ளி, ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளி மற்றும் சிறப்பு பள்ளிகளில் 6, 7, 8, 9-ம் வகுப்புகளுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் பின்வரும் நெறிமுறைகளை தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் பின்பற்ற வேண்டும். அதன்படி, 6, 7-ம் வகுப்புகளுக்கு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறையின்படி ஒருங்கிணைந்த பதிவேட்டில் 3-ம் பருவ தேர்வுக்குரிய மதிப்பெண்கள், கிரேடுகளை பதிவு செய்ய வேண்டும். 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு மதிப்பெண்களை பதிவுசெய்ய வேண்டும். 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு மதிப்பெண்களை பதிவுசெய்வதுடன், பள்ளிக்குழு தேர்ச்சி விதிகளை பின்பற்றி தேர்ச்சி அளிக்க வேண்டும்.

மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கவும், கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்துக்கு குறையாமலும் ஆசிரியர் குழுவின் ஒப்புதலுடன் 9-ம் வகுப்புக்கான தேர்ச்சி விதிகள் முடிவு செய்யப்பட்டு, தேர்ச்சி அளிக்கப்பட வேண்டும்.

அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து பள்ளிகளும் 6, 7, 8-ம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews