ஆசிரியர்கள், சங்க செயல்பாடுகள் அடிப்படையில் ஓட்டுச் சாவடியில் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டால் 'சஸ்பெண்ட்' - தேர்தல் ஆணையம் Teachers, union activities 'suspended' if they act in favor of the party at the polling booth - Election Commission
'தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள், தங்களது சங்க செயல்பாடுகள் அடிப்படையில், ஓட்டுச் சாவடியில் எந்த கட்சிக்கும் ஆதரவாக செயல்படக் கூடாது. புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தமிழகம் முழுதும், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஓட்டுச் சாவடி பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள், காலை, 10:00 மணிக்கு, மாவட்ட தேர்தல் அதிகாரி குறிப்பிடும் இடத்தில் ஆஜராக வேண்டும்.
தேர்தல் துறை உத்தரவுப்படி, அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட ஓட்டுச் சாவடிகளில், நாளை மதியம் 12:00 மணிக்குள் பொறுப்புகளை ஏற்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் பணியின்போது, எந்த கட்சிக்கும் ஆதரவாக செயல்படக் கூடாது. ' குறிப்பாக சொந்த தொகுதியில் பணியாற்றும் ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் கட்சி தொடர்புடையவர்களிடம் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து புகார் வந்தால், துறை ரீதியாக, 'சஸ்பெண்ட்' போன்ற ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வி துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஓட்டுச் சாவடி அலுவலர்கள், நாளை மறுநாள் அதிகாலையில், மின்னணு ஓட்டு இயந்திரத்தில், மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தி, பெட்டியின் இயக்கத்தை சோதித்து கொள்ள வேண்டும். மின்னணு இயந்திரம் கோளாறு இன்றி செயல்படுகிறதா என்பதை, முதலிலேயே சோதனை செய்து கொள்ளவும், ஆசிரியர்கள் அறிவுறுத்தப் பட்டு உள்ளனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.