நாளை ஏப்.8 முதல் தபால் வாக்குப்பதிவு தொடக்கம்... ஏற்பாடுகள் தீவிரம்!
தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைப்பெற உள்ள நிலையில், நாளை ஏப்ரல் 8 ம் தேதி முதல் தபால் வாக்குப்பதிவு துவங்குகிறது.
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தபால் வாக்கு செலுத்தலாம். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று அதிகாரிகள் தபால் வாக்குகளை சேகரிப்பார்கள் இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்களிக்க 85வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் மூலம் வாக்களிக்க படிவம் விநியோகிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது.
அந்த வகையில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வீட்டில் இருந்தே தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இவர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் வகையில் 12டி படிவம் மார்ச் 20ம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. 3 நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிநிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வருகின்றனர். இதற்காக சென்னையில் மட்டும் 4,676 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்,சென்னை மாவட்டத்தில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 85வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு 45716 விண்ணப்ப படிவங்களும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு 9639 விண்ணப்ப படிவங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளது. முதியோர், மாற்றுத் திறனாளிகள் 4,500 பேர் தபால் வாக்கு செலுத்தும் பணி சென்னையில் இன்று தொடக்கம்
சென்னை: சென்னை மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 4,538 பேர்தபால் வாக்கு செலுத்தும் பணி இன்று தொடங்குகிறது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டோர் வாக்குப்பதிவு மையத்துக்கு நேரடியாக சென்று வாக்களிப்பதில் சிரமம் உள்ளது. அவர்களில் விருப்பமுள்ள வாக்காளர்களுக்கு தபால் வாக்குச் சீட்டு மூலம் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
தி.நகரில் அதிகபட்சம்:
இதையடுத்து, விருப்பமுள்ள வாக்காளர்களிடம் இருந்து தபால் வாக்குச்சீட்டு கோரிய படிவம்-12டி பெறப்பட்டு, வாக்காளர்களின் பாகம் எண், வரிசை எண் ஆகியன சரிபார்த்து தபால் வாக்குச் சீட்டு தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 85 வயதுக்கு மேற்பட்ட 4,175 பேர், 363 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 4,538 பேர் தபால் வாக்கு செலுத்த உள்ளனர். அதிகபட்சமாக தியாகராயநகர் சட்டப்பேரவை தொகுதியில் 560 பேரும், அண்ணாநகர் தொகுதியில் 536 பேரும் வாக்களிக்க உள்ளனர். அந்த வாக்காளர்களுக்கு தபால் வாக்குச் சீட்டுனை வழங்கி, வாக்குப்பதிவு செய்யும் முறை மற்றும் அதை உரிய உறையிடுதல் குறித்து தெளிவாக எடுத்துக் கூறி, பதிவு செய்யப்பட்ட வாக்குச்சீட்டு அடங்கிய உறை, உறுதிமொழி படிவம் அடங்கிய உறையை பெற்றுவர 67 வாக்குப்பதிவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுவினர், மேற்கூறிய வாக்காளர்களின் வீடுகளுக்கு இன்று சென்று வாக்குப்பதிவு நடத்தி, ஏப்.13-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உறையிட்ட வாக்குச் சீட்டை ஒப்படைக்க உள்ளனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.