நீட் தேர்வு கட்டாயமில்லை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 05, 2024

Comments:0

நீட் தேர்வு கட்டாயமில்லை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!



நீட் தேர்வு கட்டாயமில்லை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!

புது தில்லியில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

2024 மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தில்லியில் உள்ள ஏஐசிசி தலைமையகத்தில் வெளியிட்டு உள்ளது.

இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். நீட் தேர்வு கட்டாயமில்லை என்று காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் மற்றும் க்யூட் தேர்வுகள் மாநிலத்தின் விருப்பத்திற்கு உட்பட்டது என்றும், 2025 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை கொண்டு வரப்படாது, தேசிய கல்விக்கொள்கை மாநில அரசுகளின் ஆலோசனைக்குப் பிறகு நடைமுறைப்படுத்தப்படும்.

ரயில் பயணங்களில் முதியோர்களுக்காந கட்டணச் சலுக்கை மீண்டும் வழங்கப்படும்.

பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தேர்தல் பத்திர திட்டம் குறித்து விசாரணை நடத்தப்படும்.

தன்பாலின ஈர்ப்பாளர்களை அங்கீகரிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும்.

மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும்.

பாஜக அரசின் இயற்றிய ஜிஎஸ்டி சட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய ஜிஎஸ்டி(2.o) இயற்றப்படும். அண்டை நாடுகளால் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை தடுக்க புதிய வழிமுறைகள் வகுக்கப்படும்.

புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.

மார்ச் 2024 வரை பெறப்பட்ட அனைத்துக் கல்விக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்.

நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான தினசரி ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும்.

எம்எம்ஏ அல்லது எம்.பி கட்சித் தாவினால் உடனடியாக பதவி இழக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்பவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சங்களாக உள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews