பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை ஒரு வாரம் நீட்டிக்க முடிவு
கோடை வெயில் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணி காரணமாக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
இந்த கல்வி ஆண்டின் இறுதிப் பணி நாள் வரும் 26ஆம் தேதியுடன் முடிவடைவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இன்றும், நாளையும் 9ஆம் வகுப்புக்கு விடுபட்ட அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வு நடக்கும். 24ஆம் தேதி முதல் தொடர்ந்து கோடை விடுமுறையாகும்.
அடுத்த கல்வி ஆண்டு ஜூன் 3ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதால் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்திருந்தது.
இருப்பினும் தமிழ்நாட்டில் தற்போது வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அதே போல் கோடை வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பள்ளிகளுக்கு மேலும் ஒருவாரம் விடுமுறை விடப்படும் என கூறப்படுகிறது..!
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.