"பணிக்கொடை" (Gratuity) பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா ? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 06, 2024

Comments:0

"பணிக்கொடை" (Gratuity) பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா ?



"பணிக்கொடை" (Gratuity) பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா ?

"கொடை"என்றால் அன்பளிப்பு என்று பொருள்.குறிப்பிட்ட காலம் பணிசெய்து ஓய்வு பெறும்போது, இவ்வளவு காலம் அவர் பணி செய்ததற்காக அவருக்கு அளிக்கப்படும் அன்பளிப்பே "பணிக்கொடை" எனப்படுகிறது. இதை அளிப்பதற்காக அவர் பணி செய்யும் காலங்களில் இதற்கென்று எந்த ஒரு தொகையும் அவரிடம் பிடித்தம் செய்யப்படுவதில்லை.

இது முழுவதுமே நிர்வாகத்தால் வழங்கப்படும் "கொடை"தான்.

பழங்காலத்தில் பணிக்கொடை என்பதெல்லாம் கிடையாது.சில தனியார் முதலாளிகள் தங்களிடம் ஓய்வு பெறும் ஊழியருக்கு இந்த மாதிரி ஒரு தொகையை அன்பளிப்பாக வழங்கி அனுப்பும் வழக்கம் இருந்தது.

நாளாவட்டத்தில் இது எல்லா இடத்திலும் பரவி சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு பணிக்கொடை கொடுத்தே ஆகவேண்டுமென்று சட்டமும் ஆகிவிட்டது.

கிராஜூவிட்டி கணக்கிடும் முறையைப் பார்ப்போம்.

ஒரு ஆண்டு சர்வீஸூக்கு 15 நாட்கள் சம்பளம் கிராஜூவிட்டி என்று கணக்கிட்டு ஒருவர் எத்தனை ஆண்டுகள் பணி செய்துள்ளாரோ அதற்குறிய தொகையை கிராஜிவிட்டியாக வழங்கவேண்டும். உதாரணமாக ஒருவர் 25ஆண்டுகள் பணி செய்திருந்தால் அவருக்கு 25×15=375நாட்கள் சம்பளமும் 30ஆண்டுகள்பணி செய்திருந்தால்30×15=450நாட்கள் சம்பளமும் கிராஜூவிட்டியாக வழங்கப்படவேண்டும்.

கிராஜூவிட்டியில் சீலிங் உண்டு.அதிகப்பட்சம் 2000000(இருபது லட்சம்)மட்டுமே வழங்கப்படும்.

பனிஷ்மென்ட் இருந்தால் சர்வீஸ் ஆண்டுகள் குறைத்துக் கணக்கிடப்படும்.

உதாரணமாக 30ஆண்டுகள் பணி செய்தவருக்கு இரண்டாண்டு இன்க்ரிமென்ட் கட் ஆகி இருந்தால் 28ஆண்டுகள் மட்டுமே சர்வீஸ் என கணக்கிடப்படும்.

கடைசியாக வாங்கிய பேசிக்கையும் DAவையும் கூட்டி அதை 26ஆல் வகுத்து வருவதுதான் ஒருநாள் சம்பளமாகும்.

இப்பொழுது கடைசிமாத பேசிக் 40000ரூபாய் வாங்கிய 35ஆண்டுகள் சர்வீஸ் முடித்த பனிஷ்மென்ண்ட் ஏதும் இல்லாத ஒருவரின் கிராஜூவிட்டியைக் கணக்கிடுவோம்.(இப்போதைய DA 7%.) பேசிக்....................................40000 DA7%(40000×7÷100)..............2800 மொத்தம்(40000+2800)........42800 26ஆல் வகுக்க=42800/26=1646ரூபாய்.

இந்த1646தான் ஒருநாள் சம்பளம்.

15நாள் சம்பளம்=1646×15=24690ரூபாய்

35ஆண்டுசர்வீசுக்கு=24690×35=864150ரூபாய் கிராஜூவிட்டியாகக் கிடைக்கும்.

சுருக்கமாகச்சொன்னால்

(Basic+DA)÷26×15×சர்வீஸ் செய்தஆண்டுகள்.இதுவே கிராஜூவிட்டி ஆகும்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews