நீங்கள் நலமா ? - முதல்வரின் புதிய திட்டம்
நீங்கள் நலமா என்ற புதிய திட்டம் மார்ச் 6ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 12,653 பயனாளிகளுக்கு ரூ.655.44 கோடி நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை பட்டியலிட்டு முதல்வர் ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மக்களின் மனசாட்சியாக திராவிட மாடல் ஆட்சி செயல்படுகிறது.
மயிலாடுதுறையில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மக்களுக்கு சல்லிக்காசு கூட நிதியை பிரதமர் தரவில்லை. நிதி வழங்காத நிலையில் வாக்கு கேட்டு பிரதமர் மோடி தமிழகத்திற்கு அடிக்கடி வருகிறார். நீங்கள் நலமா என்ற புதிய திட்டம் மார்ச் 6ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. அரசு அறிவித்த திட்டங்கள் செயல்படுத்ப்படுகிறதா என்பதை நீங்கள் நலமா திட்டம் மூலம் கண்காணிக்கப்படும்.
திருவோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
கடலங்குடி கிராமத்தில் புதிய படுகை அணை அமைக்கப்படும். மீன் இறங்குதளம் புதுப்பிக்கப்படும். திருவோணம் வருவாய் வட்டம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது என்றார். முன்னதாக மயிலாடுதுறையில் கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.