ஓய்வு பெறும்போது கிடைக்கவுள்ள ஓய்வூதிய பணிக்கொடையை(Pension Gratuity) எவ்வாறு கணிப்பது?
பலமுறை விளக்கியது !
1.இந்த ஓய்வூதிய பணிக்கொடை,ஓய்வூதியத்துடன் , 55 வயதில் ஓய்வுபெறும் போது ஆண்களுக்கும்,20 வயதில் ஓய்வுபெறும் ஆசிரியைகளுக்கும் கிடைக்கும்
2,இந்த அட்டவணையில் சிவப்பு நிறத்தில் அட்டவணை இட்டுள்ள பகுதியை மட்டும் கவனியுங்கள்.ஓய்வூதிய பணிக்கொடையை எப்படி ,என்ன வீதத்தில் கணிக்கப்படுகின்றது என்று அறியலாம். 3.இந்த கணிப்புக்கு ஓய்வுபெறும்போது ,இறுதியாக பெற்ற சம்பளமும் சேவைக்காலமுமே அடிப்படையானதாகும்.10,15 வருட சேவை என்று அட்டவணையில் இருந்தாலும் ,வைத்திய தகுதின்மை இன்றி ஓய்வுபெற குறைந்தது 20 வருட சேவைக்கலாம் வேண்டும்.
4.ஓய்வுபெறும்போது கிடைப்பது குறைக்கப்பட்ட ஓய்வூதியம்.(Reduced Pension)ஆகும்.ஆனால் ஓய்வூதிய பணிக்கொடையைக் கணிக்கும்போது குறைக்கப்படாத ஓய்வூதியத்தை (Unreduced Pension ) 24 மாதத்தால் பெருக்கி தருவார்கள் .10 வருடங்களின் பின்னர் குறைக்கப்படாத ஓய்வூதியம் கிடைக்கும் .இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் 10 வீதமாகும் .
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.