தொடக்கக் கல்வி - ஒரு பாடத்துக்கு ஒரு ஆசிரியர் - அரசு உத்தரவு Elementary Education – One Teacher per Subject – Govt
தமிழகத்தில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான அரசு தொடக்க பள்ளிகளிலும்; ஒன்றாம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையிலான நடுநிலை பள்ளிகளிலும், 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் தான் நியமிக்கப்படுகின்றனர். அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் அதிகபட்சம், 100 மாணவர்கள் மட்டுமே இருப்பதால், ஒன்று அல்லது இரண்டு பாடங்களுக்கு மட்டுமே ஆசிரியர் இருப்பார்.
மற்ற பாடங்களுக்கு ஆசிரியர் இல்லாததால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மற்றும் கற்றலில், தொடக்க, நடுநிலை பள்ளிகள் பின்தங்கும் நிலை தொடர்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இனி வரும் காலங்களில், 100 மாணவர்களுக்கு மேல், ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ஒரு ஆசிரியர் நியமித்து கொள்ளலாம் என, தொடக்க கல்வி இயக்குனரகத்துக்கு பள்ளிக்கல்வி துறை அனுமதி அளித்துள்ளது.
அதனால், வரும் கல்வியாண்டில், பாட வாரியாக ஆசிரியர் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தேவையான பாடங்களுக்கு புதிய ஆசிரியர்களை நியமிக்க, தொடக்க கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.