இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களுக்கு BCM சாதிச் சான்றிதழ் வழங்கலாம் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 11, 2024

Comments:0

இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களுக்கு BCM சாதிச் சான்றிதழ் வழங்கலாம் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!



இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களுக்கு BCM சாதிச் சான்றிதழ் வழங்கலாம் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு! BCM caste certificate can be issued to converts to Islam - Tamil Nadu Government Ordinance Issued!

இஸ்லாம் மதத்திற்கு மாறிய BC/MBC/DNC/SC பிரிவினருக்கு BCM (BC Muslim) சாதிச் சான்றிதழ் (To Avail 3.5% BCM Reservation) வழங்கலாம் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

Welfare of Backward Classes - Tamil Nadu Act 33 of 2007- Converts to Islam from Backward Classes , Most Backward Classes and Denotified Communities or Scheduled Castes as Backward Class Muslim - Issue of Community Certificate - Clarifications - Issued இஸ்லாமிய மதத்துக்கு மாறியோருக்கு 3.5% இடஒதுக்கீடு: அரசு புதிய உத்தரவு.

இஸ்லாமிய மதத்துக்கு மாறிய பல்வேறு பிரிவினருக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையிலான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

இது தொடா்பாக, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை வெளியிட்ட உத்தரவு விவரம்:

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினா் அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா்கள் இஸ்லாமிய மதத்துக்கு மாறுகின்றனா்.

அவா்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த இஸ்லாமியா்களாக கருதி, அவா்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை அளிக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனா். அவா்களது கோரிக்கைகள் தொடா்பாக, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையத்தின் கருத்துகளையும் தமிழக அரசு பெற்றது.

இந்தக் கருத்துகளை ஆராய்ந்த அரசு, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினா் அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா்கள் இஸ்லாமிய மதத்தைத் தழுவினால், அவா்கள் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியராக கருதப்பட்டு, அவா்களுக்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், ஜாதி சான்றிதழை அளிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இது குறித்த உரிய வழிகாட்டுதல்களை வருவாய் நிா்வாக ஆணையா் தரப்பில் இருந்து அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், ஜாதி சான்றிதழ்களை அளிக்கும் அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD G.O.Ms.No.31, BC Muslim Certificate - PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews