அரசு உயர் நிலைப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு - 3 பேர் சஸ்பெண்ட் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 13, 2024

Comments:0

அரசு உயர் நிலைப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு - 3 பேர் சஸ்பெண்ட்



Students who ate lunch in a government high school fell ill - 3 were suspended-

சிதம்பரம் அருகே சாக்காங்குடி அரசு உயர் நிலைப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட விவகாரத்தில் சத்துணவு ஊழியர்கள் 3 பேரை சஸ்பெண்ட் செய்து கடலூர் ஆட்சியர் உத்தரவு

அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்ட விவகாரத்தில் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்துள்ளனர். அரசு பள்ளியின் சத்துணவு ஊழியர்கள் 3 பேரை சஸ்பெண்ட் செய்து கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவு அளித்துள்ளார். சிதம்பரம் அருகே சாக்கான்குடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.

இந்த பள்ளியில் சாத்தங்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ – மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்நிலையில் பள்ளியில் பிப்ரவரி 12 ஆம் தேதி திங்கட்கிழமை மதிய உணவு பரிமாறப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்ட நிலையில், பள்ளியின் ஆசிரியர்கள் அவர்களை அழைத்து உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர். தொடர்ந்து மாணவர்கள் அதிகமானோர் மயங்கியதால் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து நடந்த சோதனையில் உணவில் அரணை விழுந்தது தெரியவந்தது.

சிதம்பரம் அரசு மருத்துவமனை, புவனகிரி மருத்துவமனை, சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் 92 மாணவ மாணவிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவ – மாணவிகளுக்கு ஆபத்து இல்லை என மருத்துவர் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் பள்ளி மதிய உணவில் அரணை விழுந்தது தொடர்பாக 3 பேரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். சமையலர், சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் ஆகிய 3 பேரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு அளித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews