பள்ளி மாணவர்களுக்கான இளம் விஞ்ஞானிகள் திட்டம் பதிவு செய்யலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 21, 2024

Comments:0

பள்ளி மாணவர்களுக்கான இளம் விஞ்ஞானிகள் திட்டம் பதிவு செய்யலாம்



9ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு!

இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி (யுவிகா) திட்டத்தில் சேர இன்று முதல் பதிவு செய்யலாம்.

9ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே பங்கேற்கும் இத்திட்டத்தில் சேர jigyasa.iirs.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வரும் மே 13ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பயிற்சியில், மாணவர்களுக்கு விண்வெளி தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் பண்பாடுகள் பற்றிய அடிப்படை அறிவு வழங்கப்படும்

பள்ளி மாணவர்களுக்கான இளம் விஞ்ஞானிகள் திட்டம் நாளைமுதல் பதிவு செய்யலாம் பள்ளி மாணவர்களுக்கான இளம் விஞ்ஞானிகள் திட்டத்தின் பதிவு செவ்வாய்க்கிழமை (பிப்.20) தொடங்கவுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி தொழில்நுட்பம், விண்வெளி அறிவியல் உள்ளிட்டவற்றில் அடிப்படை அறிவை ஏற்படுத்தும் வகையில், 'யுவ விஞ்ஞானி கார்யக்ரம்' எனப்படும் இளம் விஞ்ஞானி கள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் நிகழாண்டுக்கான இளம் விஞ்ஞானிகளைத் தேர்வு செய்வதற்கான பதிவு பிப்.20-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதில், 9-ஆம் வகுப்பு மாணவர்கள் பதிவு செய்யலாம்.

பங்கேற்க விரும்பும் மாணவர்கள் மார்ச் 20-ஆம் தேதி வரை https://jigyasa.iirs.gov.in/registration முன்பதிவு செய்து கொள்ளலாம். இரு வாரங்கள் நடத்தப்படும் இந்தப் பயிற்சித் திட்டத்தில் பரிசோ தனை விளக்கம், கேன்சாட், ரோபோடிக் கிட், இஸ்ரோ விஞ்ஞானி களுடன் கலந்துரையாடல் மற்றும் கள ஆய்வு இடம்பெற்றுள்ளன. மாணவர்களின் இருப்பிட அடிப்படையில் 5 குழுக்களாகப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சி அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றில் மாணவர்களிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என இஸ்ரோ வெளியிட்டுள்ள செய் திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews