சமக்ரசிஷா ஊழியர்களுக்கு 5 % ஊதிய உயர்வு 5 % pay hike for Samakrasisha employees
சென்னை, பிப். 11: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் (சமக்ரசிஷா)கீழ் பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கி ணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கை:
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் புரோக்ராமர், சிவில் பொறியாளர், கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர், எம்ஐஎஸ் ஒருங்கிணைப்பாளர், எஸ்எம்சி கணக்காளர், தரவு பதிவு அலுவலர், அலுவலக உதவியாளர், உத வியாளர் ஆகியோருக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும்.
நிகழாண்டு பிப்.1-ஆம் தேதி முதல் இந்த ஊதிய உயர்வு அமல் படுத்தப்படும். அரசுப் பணியில் உள்ள ஓய்வு பெற்ற ஆலோசகர் கள், உதவியாளர்களுக்கு இது பொருந்தாது என அந்த சுற்றறிக் கையில் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.