வாட்ஸ்அப்பில் சூப்பர் அப்டேட் அறிமுகம்... பயனாளர்கள் குஷி.
ஃபோட்டோ, வீடியோ, ஆவணங்கள் போன்றவற்றை நம்முடைய நண்பர்கள், குடும்ப உறவுகள், அலுவலக ஊழியர்கள் போன்றோருக்கு பகிர்ந்து கொள்ள நாம் வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகிறோம்.
இந்த தொழில்நுட்பம் வருவதற்கு முன்பாக நாம் ப்ளூடூத் வசதியை பயன்படுத்தி வந்தோம். இவ்வாறு ப்ளூடூத் மூலமாக அனுப்பி வைக்கும்போது நீண்ட நேரம் பிடித்தது. இதனால் ஷேர் இட், ஷேர் மீ போன்ற செயலிகளை பயன்படுத்த தொடங்கினோம்.
அதில் எவ்வளவு பெரிய ஃபைல் ஆக இருந்தாலும் நொடிப் பொழுதில் நமக்கு வந்து கொண்டிருந்தது. ஆனால், ஷேர் இட், ஷேர் மீ போல எண்ணற்ற ஷேரிங் ஆப்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு செயலியை பயன்படுத்தி வந்ததால், அவர்களுடன் நாம் இணைக்க முற்படும்போது நாமும் புதிய, புதிய செயலிகளை டவுன்லோடு செய்ய வேண்டியிருந்தது.
இத்தகைய சூழலில் தான் பெரும்பாலான நபர்கள் வாட்ஸ்அப் மூலமாகவே ஆவணங்களை அனுப்பி வைக்கத் தொடங்கினர்.
இன்டர்நெட் மூலமாக இந்த ஆவணங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
அதே சமயம், வாட்ஸ்அப்பில் பெரிய ஃபைல்களை அனுப்பி வைக்க முடியாது என்றொரு குறை இருந்தது. அதற்கும் கூட கடந்த ஆண்டு தீர்வு காணப்பட்டது.
அதன்படி வாட்ஸ்அப்பில் 2 ஜிபி வரையிலான ஃபைல்களையும் கூட தங்கு தடையின்றி அனுப்பி வைக்க முடிந்தது.
ஆனால், இதிலும் கூட நம்முடைய டேட்டா காலியாகி விடுகிறது என்றொரு குறை மக்கள் மனதில் இருக்கிறது. மேலும் பெரிய ஃபைல் என்றால் அதன் அப்லோடிங் நேரம் அதிகமாக இருக்கிறது. இத்தகைய சூழலில் தான், அருகாமையில் இருக்கும் நபர்களிடம் வீடியோ மற்றும் ஃபோட்டோ போன்ற ஃபைல்களை நேரடியாக அனுப்பி வைக்கும் வசதியை செயல்படுத்த வாட்ஸ்அப் நிறுவனம் தயாராகி வருகிறது.
இந்தப் புதிய வசதியை பயன்படுத்துவதற்கு, வாட்ஸ்அப் செயலியில் புதிய ஆப்சன் ஒன்று இடம்பெறும் என்று தெரிகிறது.
அங்கு சென்று இரு தரப்பு யூசர்கள் தங்களுக்கிடையே ஆவணங்களை பரிமாறிக் கொள்ளலாம்.
அதேசமயம், வாட்ஸ்அப் சேட்டிங்கில் உள்ளதைப் போல இதற்கும் எண்டு-டூ-எண்டு பாதுகாப்பு வசதி உண்டு.
ஆண்டிராய்டு ஃபோன்களில் ஏற்கனவே நியர்பை என்ற செயலியும், ஆப்பிள் ஐஃபோன்களில் ஏர் டிராப் என்ற செயலியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றாலும், வாட்ஸ்அப்பில் இடம்பெறும் புதிய அம்சமானது பாதுகாப்பு வசதிகளைக் கொண்டிருக்கும் என்பதால் இதற்கு வரவேற்பு இருக்கும் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.