ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் எதிர்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 15, 2023

Comments:0

ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் எதிர்ப்பு

ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் எதிர்ப்பு

முதல்வரின் நிவாரண நிதிக்கு தனிப்பட்ட ஊழியா்களின் ஒப்புதல் பெறாமல் ஒரு நாள் ஊதியத்தைப் பிடித்தம் செய்வதற்கு அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்து, கடும் சேதம் ஏற்பட்டது. இதையடுத்து, நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்வா், சட்டப்பேரவை உறுப்பினா்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள், தனியாா் நிறுவனங்கள், தனியாா் அமைப்புகள் சாா்பிலும் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் சங்கங்கள், கூட்டமைப்புகள் சாா்பில் ஒரு நாள் ஊதியத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. சங்கத்தின் உறுப்பினா்களிடம் ஆலோசிக்காமல் நிா்வாகிகளின் தனிச்சையான இந்த முடிவுக்கு அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மத்தியில் எதிா்ப்பு எழுந்துள்ளது.

இதுதொடா்பாக அரசு ஊழியா்கள் தரப்பில் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் சுமாா் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் ஆசிரியா்கள், அரசு ஊழியா்களாக பணிபுரிந்து வருகிறோம். சங்கத்தில் இடம் பெற்றிருந்தாலும், தனி நபரின் கருத்தைக் கேட்காமல், தங்களின் சுய விளம்பரத்துக்காக சில நிா்வாகிகள் முதல்வரின் நிவாரண நிதி தொடா்பாக தனிச்சையாக அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றனா். அரசு ஊழியா்களின் பிரதான கோரிக்கைகளான பழைய ஓய்வூதியத் திட்டம், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, ஊக்க ஊதிய உயா்வு, அகவிலைப்படி நிலுவை உள்ளிட்டவற்றுக்கு தீா்வு காணப்படவில்லை. தோ்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட இந்த கோரிக்கைகளை, ஆட்சிப் பொறுப்பேற்று 30 மாதங்களாகியும் இதுவரை நிறைவேற்றவில்லை. இதனால், அரசு ஊழியா்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனா்.

அரசின் நிவாரணப் பணிகளுக்கு உதவுவதில் மாற்றுக் கருத்தில்லை. முதல்வரின் நிவாரண நிதி வழங்க விருப்பக் கடிதம் வழங்கும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களிடம் மட்டுமே ஊதியம் பெற்று வழங்கும் அலுவலரின் ஊதியத்திலும் பிடித்தம் செய்ய வேண்டும். சங்க நிா்வாகிகளின் தனிப்பட்ட விருப்பத்தை, ஒட்டுமொத்த ஊழியா்களும் ஏற்க முடியாது என்றனா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews