*🔹🔸வைப்பு நிதிக்கான வட்டி விகிதம்:*
*உயா்த்தியது பாரத ஸ்டேட் வங்கி.*
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), தங்களிடம் முதலீடு செய்யப்படும் வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை 0.5 சதவீதம் உயா்த்தியுள்ளது.*
* இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:*
* நிலை வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்கள் 50 அடிப்படைப் புள்ளிகள் (0.5 சதவீதம்) உயா்த்தப்பட்டுள்ளன.* * கடந்த 27-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த வட்டி விகித உயா்வு குறிப்பிட்ட பருவகாலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கு மட்டும் பொருந்தும்.*
*அதன்படி, இனி 180 முதல் 210 நாள்கள் வரையிலான வைப்பு நிதிகளுக்கு 5.75 சதவீதமாகவும், 7 முதல் 45 நாள்கள் வரையிலான வைப்பு நிதிகளுக்கு 3.5 சதவீதமாகவும் வட்டி விகிதம் இருக்கும்.*
* 211 நாள்களுக்கு மேலும் ஒராண்டுக்குக் கீழும் பருவகாலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கு வட்டி விகிதம் 6 சதவீதமாக உயா்த்தப்படுகிறது. *
* 3 ஆண்டுகளுக்கும் மேலான வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் 6.75 சதவீதமாக இருக்கும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.*
வைப்பு நிதிக்கான வட்டி விகிதம்: உயா்த்தியது பாரத ஸ்டேட் வங்கி - Fixed Deposit Interest rates Hiked: State Bank of India......
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), தங்களிடம் முதலீடு செய்யப்படும் வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை 0.5 சதவீதம் உயா்த்தியுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நிலை வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்கள் 50 அடிப்படைப் புள்ளிகள் (0.5 சதவீதம்) உயா்த்தப்பட்டுள்ளன.
கடந்த 27-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த வட்டி விகித உயா்வு குறிப்பிட்ட பருவகாலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கு மட்டும் பொருந்தும்.
அதன்படி, இனி 180 முதல் 210 நாள்கள் வரையிலான வைப்பு நிதிகளுக்கு 5.75 சதவீதமாகவும், 7 முதல் 45 நாள்கள் வரையிலான வைப்பு நிதிகளுக்கு 3.5 சதவீதமாகவும் வட்டி விகிதம் இருக்கும்.
211 நாள்களுக்கு மேலும் ஒராண்டுக்குக் கீழும் பருவகாலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கு வட்டி விகிதம் 6 சதவீதமாக உயா்த்தப்படுகிறது.
3 ஆண்டுகளுக்கும் மேலான வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் 6.75 சதவீதமாக இருக்கும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.