சம்பள பட்டியல் தயாரிப்பில் சவாலாகும் சர்வர் பிரச்னை மனஉளைச்சலில் அலுவலர்கள்
தமிழகத்தில் ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., என்ற ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு மையம் சர்வர் பிரச்னை காரணமாக சம்பள பட்டியல் பதிவேற்றம் செய்வதில் கல்வித்துறை அலுவலர்கள் கடும் மனஉளைச்சலில் தவிக்கின்றனர். மாதம் 15 தேதிக்கு மேல் வரும் திங்களில் சென்னை, மதுரை, கோவை என மண்டலம் வாரியாக ஆன்லைனில் ஆசிரியர், அலுவலர்களுக்கான சம்பள பட்டியல் பதிவேற்றம் செய்யப்படும். 24 மணிநேரத்தில் பில் ஜெனரேட் ஆனபின் அதற்கான தகவல் தெரிவிக்கப்படும். பின் 25 தேதிக்குள் கருவூலத்தில் ஒப்படைத்தால் தான் சம்பளம் பெற முடியும்.
ஆனால் லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் பதிவேற்றம் செய்வதால்பெரும்பாலும் சர்வர் முடங்கியே கிடப்பதும்,நள்ளிரவுக்கு மேல்சர்வர் வேலை செய்வதும்அலுவலர்களை மனஉளைச்சலில் ஆழ்த்தி வருகிறது.
இந்நிலையில் டிச., 24 முதல் சர்வர் புதுப்பிக்கப்படவுள்ளதால் டிச., 8 க்குள் சம்பள பட்டியல் பதிவேற்றம் செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் பல தொழில்நுட்ப பிரச்னையால் இதுவரை பதிவேற்றப் பணிகள் முடிந்தபாடில்லை என ஆசிரியர்கள் கொந்தளிக்கின்றனர். சவாலாக உள்ளது அவர்கள் கூறியதாவது:
ஒவ்வொரு மாதமும் இந்த சர்வர் பிரச்னையால் அரசு அலுவலர்கள் படாதபாடு படுகின்றனர். 95 சதவீதம் நள்ளிரவில் தான் பணியாற்ற வேண்டியுள்ளது. இந்த சர்வரை கையாளும் தனியார் நிறுவனம் 15 ம் தேதிக்கு பின் தான் ஆன்லைனில் பதிவேற்ற முடியும் என தெரிவித்து வந்த நிலையில்இம்மாதம் மட்டும் 8 முதல் பதிவேற்றம் செய்யலாம் என தெரிவித்துள்ளது.
அப்படியென்றால் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் இருந்தே பதிவேற்றம் செய்ய அனுமதிக்கலாமே. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பதிவேற்றம் நேர ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நேரத்திலும் ஆன்லைன் வேலை செய்வதில்லை. உதவிபெறும் பள்ளிகளுக்கு இப்பணி மேலும் சவாலாக உள்ளது. இம்முறையை அரசு எளிமைப்படுத்த வேண்டும் என்றனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.