தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்த முடிவு - வழிகாட்டுதல்கள் வெளியீடு - Decision to conduct special Patta Camps at 100 places across Tamil Nadu - Guidelines issued
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் 2023 ஜூன் மாதம் முதல் 2024 ஜூன் மாதம் வரை நடைபெறுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது முகாம்கள் நடத்துவது தொடர்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது - தொடர்பாக.
பார்வை
பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 10.07.2023. பார்வையில் காணும் அரசுக் கடிதத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் 2023 ஜூன் மாதம் முதல் 2024 ஜூன் மாதம் வரை நடைபெறுவதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்த அரசால் முடிவு செய்யப்பட்டு, அதனடிப்படையில் மாவட்டந்தோறும் மேற்குறிப்பிட்ட சிறப்பு பட்டா முகாம்களை நடத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு அரசால் வழங்கப்பட்டது.
2. எனவே, தங்கள் மாவட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கின்படி அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி சிறப்பு பட்டா முகாம்களை தங்களின் நேரடி கண்காணிப்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யுமாறும், இப்பொருள் குறித்த மாதாந்திர பணிமுன்னேற்ற அறிக்கையினை நில நிருவாக ஆணையர் மூலம் அரசுக்கு பிரதிமாதம் 5 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறும், இச்சிறப்பு பட்டா முகாம்கள் தங்கள் மாவட்டத்தில் ஜனவரி 2024-க்குள் நடத்தி முடிக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.