யார் - எதற்காக IT RETUN செய்ய வேண்டும்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 06, 2023

Comments:0

யார் - எதற்காக IT RETUN செய்ய வேண்டும்?

யார் - எதற்காக IT RETUN செய்ய வேண்டும்?

PAN எண் வைத்துள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிதியாண்டிலும் வருமான வரித்துறை நிர்ணயிக்கும் காலக்கெடுவிற்குள் தங்களது வருமானம் & வரி விபரங்களைத் தனிப்பட்ட முறையில் வருமான வரித்துறையிடம் சமர்ப்பித்தாக வேண்டும். இதற்கு IT RETURN என்று பெயர்.

2022-23 நிதியாண்டில், வருமான வரி செலுத்தியிருந்தாலும் - செலுத்தாவிட்டாலும் தங்களது வருமானம் & வரி விபரங்களை வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்க (IT RETUN செய்ய) 31.07.2023 இறுதி நாளாகும்.

அவ்வாறு சமர்ப்பிக்கத் தவறினால் ரூ.5,000/- அபராதம் விதிக்கப்படும். இது மற்றவர்களுக்கு எப்படியோ அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை கட்டாயமாக நேர் செய்யப்பட்டுவிடும். நான் இதுவரை IT RETURN செய்ததேயில்லையே. . . எனக்கென்ன அபராதமா விதித்தார்கள்? என எண்ணலாம். . . .

தொழில்நுட்ப வசதி, PAN, ஆதார் இணைப்பு என அனைத்தும் ஒருங்கிணைந்துவிட்டதால் வருங்காலங்களில் கண்காணிப்புகள் தீவிரமாகும். அபராதம் தானாக வந்து சேரும்.

--- --- ----

எனக்குத்தான் FORM-16 வந்திருச்சே நான் ஏன் IT RETURN செய்ய வேண்டும்? என்று தோன்றலாம். . .

FORM-16 என்பது A & B என இரு பிரிவாக இருக்கும்.

FORM-16 A என்பது ஊதியம் வழங்கும் அலுவலர் தனது TAN எண்ணில் ஊழியரிடம் இருந்து பிடித்தம் செய்து வைத்த வருமான வரித் தொகையை, வருமான வரித்துறையிடம் அவரவர் PAN எண்ணிற்கென பிரித்துச் செலுத்திவிட்டேன் என்பதைத் தெரிவிக்கும் சான்றிதழ் ஆகும்.

FORM-16 B என்பது ஊதியம் வழங்கும் அலுவலரிடம் தாங்கள் பிப்ரவரி மாதத்தில் சமர்ப்பித்த வருமான வரிப் படிவத்தில் உள்ள தரவுகளைப் பிரிவு வாரியாக உங்களது PAN எண்ணில் பதிவேற்றியதைக் குறிக்கும் சான்றிதழ் ஆகும்.

எனவே இவையிரண்டுமே ஊதிய அலுவலர் வழங்கும் சான்றிதழ். அவ்வளவே. --- --- --- இந்த இரு சான்றிதழ்கள் போதாதா? மீண்டும் எதற்கு IT Return? எனலாம். . . .

FORM 16B-ல் தனிநபரது பணித்தளத்தில் பெற்ற ஊதியம் & பிடித்தம் சார்ந்தவை அலுலரால் மட்டுமே பதிவேற்றப்படுகிறது. அவ்வாறு பதிவேற்றப்பட்டதற்கு சார்ந்த ஊழியர் ஒப்புதல் அளிக்கிறார் என்பதை IT Return மூலமே வருமான வரித்துறை உறுதி செய்து கொள்கிறது.

மேலும், இதனுடன் தனிநபரது மற்ற பணப்பரிமாற்றங்களையும் வருமான வரித்துறையின் மென்பொருளானது தங்களது PAN எண் வழி கண்காணித்துக் கொண்டேதான் இருக்கும். நடப்பு ஆண்டில், வங்கிச் சேமிப்புக் கணக்கு & வைப்புநிதி உள்ளிட்டவற்றிற்கு வரவான வட்டியானது அவரவர் PAN எண்ணில் தானாகவே பதிவேற்றப்பட்டுள்ளது. இதற்கும் தனிநபர் ஒப்புதல் அளிக்கிறாரா என்பதை IT Return மூலமே வருமான வரித்துறை உறுதி செய்து கொள்கிறது.

ஆக, பணி சார்ந்த பணப்பரிமாற்றம் & தனிப்பட்ட பணப்பரிமாற்றங்கள் என்று தனது ஒட்டுமொத்த வருமானம் - சேமிப்பு - செலவு - வரி உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தனது சுய நினைவோடே வருமான வரித்துறையிடம் நானே சமர்ப்பிக்கிறேன் என்ற தனிநபரின் உறுதியளிப்பை வருமான வரித்துறையானது IT Return மூலம்தான் உறுதி செய்து கொள்கிறது.

IT Return செய்யவில்லை எனில், உங்களது வருமானத்தை வருமான வரித்துறைக்குத் தெரிவிக்க மறுக்கிறீர் / மறைக்கிறீர் என்றே பொருள் கொள்ளப்படும். இது தண்டனைக்குரிய பொருளாதாரக் குற்றமாகும்.

எனவே, வருமான வரி கட்டியிருந்தாலும் கட்டாவிட்டாலும், FORM 16 வாங்கியிருந்தாலும் உரிய காலத்தில் நமது வருமானம் & வரி விபரங்களை வருமான வரித்துறைக்குத் தெரிவிக்க IT Return செய்வோம்.

✍🏼செல்வ.ரஞ்சித் குமார்

CLICK HERE TO DOWNLOAD INCOME TAX CALCULATOR 2024

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews