பள்ளி தலைமை ஆசிரியர் மீது வழக்கு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 06, 2023

Comments:0

பள்ளி தலைமை ஆசிரியர் மீது வழக்கு

பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்; தலைமை ஆசிரியர் மீது வழக்கு

ஓமலூர், நவ.6-

ஓமலூர் அருகே டேனிஷ்பேட்டை ஊராட்சி பெரிய வட கம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.

பள்ளியின் தலைமை ஆசிரியராக பெரியவடகம்பட்டி கோவிந்தம்மாள் பாலம் பகுதியை சேர்ந்த சின்ராஜ் (வயது 50) இருந்து வருகிறார்.

இவர் மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில் காடையாம்பட்டி தொடக்கக்கல்வி அலுவலர் சந்திரா பள்ளிக்கு சென்று விசா ரித்தார்.

தொடர்ந்து நேற்று முன்தினம் ஓமலூர் அனைத்து மகளிர்போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா மற்றும் குழந்தைகள் நல அலுவலர்கள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் சின்ராஜ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
IMG_20231106_125632

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84602041