தீபத்திருவிழாவை முன்னிட்டு வரும் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 21, 2023

Comments:0

தீபத்திருவிழாவை முன்னிட்டு வரும் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்



தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

*திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, வரும் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன சென்னை, பெங்களூரு, புதுச்சேரியில் இருந்து பேருந்துகள் இயக்கம்,*

*- போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்*

கார்த்திகை தீப திருவிழாவிற்கு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது - மாண்புமிகு போக்குவரத்துதுறை அமைச்சர் திரு.எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் தகவல் செய்தி வெளியீடு எண்: 2313

செய்தி வெளியீடு


21.11.2023

கார்த்திகை தீப திருவிழாவிற்கு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது - மாண்புமிகு போக்குவரத்துதுறை அமைச்சர் திரு. எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள் தகவல்

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருநாள் 26/11/2023 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணிக்கு நடைபெறவுள்ளதை முன்னிட்டும், 27/11/2023 அன்று பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டும், 25/11/2023 சனிக்கிழமை முதல் 27/11/2023 வரை அனைத்து பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக சிறப்பு பேருந்துகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி, சென்னையிலிருந்தும், தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் மேற்கண்ட நாட்களில் 2700 சிறப்பு பேருந்துகள் மூலம் 6947 நடைகள் பக்தர்கள் வசதிக்காக இயக்கப்பட உள்ளது. மேலும். திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து பக்தர்கள் கிரிவலப் பாதை சென்று திரும்பி வருவதற்கு வசதியாக 40 சிற்றுந்துகள் பயணிகள் கட்டணமில்லா சிற்றுந்துகளாக இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய ஏதுவாக https://www.tnstc.inஎன்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் பேருந்துகள் புறப்படும் இடங்கள் ஆகிய விவரம்.

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews