தினம் ஒரு தகவல் - அடிக்காத ( ரோபோ ) ஆசிரியர்கள்...! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 26, 2023

Comments:0

தினம் ஒரு தகவல் - அடிக்காத ( ரோபோ ) ஆசிரியர்கள்...!

தினம் ஒரு தகவல் அடிக்காத ஆசிரியர்...!

எந்த ஆசிரியரை உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்?

திட்டாத, அடிக்காத, கை வலிக்க வீட்டுப்பாடம் கொடுக்காத, ஜாலியா பேசி சிரிப்பு மூட்டுகிற ஆசிரியர்னா எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும் அல்லவா?

இந்த பண்பு எல்லாமே சேர்ந்து கிடைக்கிற ஆசிரியர்கள் ரொம்ப குறைவுதான். ஆனால், தென்கொரியாவில் சில ஆசிரியர்களை கண்டால் குழந்தைகளுக்கு ஏக குஷிதான். ஏன்னா, அவர்கள் ரோபோ ஆசிரியர்கள்...! தென்கொரியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் தாய் மொழியின் மூலம்தான் எல்லாப் பாடங்களையும் பிள்ளைங்க படிக்கிறாங்க. ஆனால், ஆங்கில பாடத்தைக் கற்றுக்கொ டுக்க அங்கே போதிய ஆசிரியர்கள் கிடையாது. அதேமாதிரி ஆங்கிலம் கற்றுக்கொள்ளவும் பிள்ளைகளுக்கு அவ்வளவா ஆர்வம் கிடையாது.

அதனால், 3 ஆண்டுகளுக்கு முன்னால் ஜப்பான், தென் கொரியா நாடுகளில் ஆங்கில பாடத்தைக் கற்று கொடுப்ப தற்காக ரோபோ ஆசிரியரை அறிமுகப்படுத்தினார்கள். ரோபோக்கள் சுத்திசுத்தி வந்து பிள்ளைகளுக்குப் பாடம் எடுத்தன. உண்மையான ஆசிரியர் போலவே பாடம் நடத் தின. இந்த ரோபோக்கள் அடிப்பதில்லை. திட்டுவதில்லை. கொஞ்சி கொஞ்சி பாடம் எடுக்கும். ஆங்கிலம்னாலே தூரமாக ஓடிய குழந்தைகள், அதுக்கு அப்புறம் ஆர்வமாக படிக்க ஆரம்பித்தார்கள். எல்லா பிள்ளைகளுக்கும் ரோபோ ஆசிரியரை பிடிக்க ஆரம்பித்தது. இதனால் ஜப்பான், தென்கொரியாவில் பசங்களைப் படிக்க வைக்க நிறைய ரோபோ ஆசிரியர்களை உருவாக்கி வருகி நார்கள்.

IMG_20231126_160329

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84629582