வேலை இல்லாத 200 பதவிகள் நீக்கம்: பள்ளி கல்வித்துறைக்கு அறிவுறுத்தல்
வேலை இல்லாத 200 பதவிகள் நீக்கம்: பள்ளி கல்வித்துறைக்கு அறிவுறுத்தல் Abolition of 200 jobless posts: Instruction to School Education Department
பணி ஒதுக்கீடு இல்லாத, 200க்கும் மேற்பட்ட பதவிகளை, நியமன பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய, பள்ளி கல்வித்துறைக்கு தமிழக நிதித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு அரசு துறையிலும், துறை ரீதியான பணிகளை மேற்கொள்ள பல்வேறு பதவிகள் உள்ளன. இவை அந்தந்த துறைகளுக்கு தேவையான பணிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழக பள்ளி கல்வித்துறையில், பல்வேறு பணிகள் அடிப்படையில், 350 பதவிகள் நியமன பட்டியலில் உள்ளன. இவை கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளன. இவற்றில், தற்போதைய தேவைகள் அடிப்படையில், பழைய, புதிய பதவிகள் குறித்து, தமிழக மனிதவள மேலாண்மை துறை ஆய்வு செய்துள்ளது.
இதுகுறித்து, தமிழக நிதித்துறை அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி, பணிகள் இல்லாத மற்றும் ஒரே பணிக்கு கூடுதலாக உள்ள பதவிகளை, நியமன பட்டியலில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, தமிழக பள்ளி கல்வித்துறையில் தற்போதுள்ள, 350 பதவிகளை ஆய்வு செய்து, அவற்றில், தேவையில்லாமலும், உபரியாகவும் உள்ள, 200 பதவிகளை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நீக்கம் செய்யப்படும் பதவிகளுக்கான பணியிடங்களை, தற்போது தேவைப்படக்கூடிய பதவிகளை, இணையான வேறு பதவி பட்டியலில் இணைத்து கொள்ளலாம் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.