WhatsApp புதிய அப்டேட்! - இனி போன் நம்பர் தேவையில்லை.. யூசர் நேம் போதும்.. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 04, 2023

Comments:0

WhatsApp புதிய அப்டேட்! - இனி போன் நம்பர் தேவையில்லை.. யூசர் நேம் போதும்..

வாட்ஸ்அப்புக்கு இனி போன் நம்பர் தேவையில்லை.. யூசர் நேம் போதும்..

வாட்ஸ் அப்பில் வரப்போகும் புதிய அப்டேட்!


இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்று வாட்ஸ் அப்பிலும் 'Username' வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வாட்ஸ் அப்பில், 'Username' ஆப்ஷனை மெட்டா நிறுவனம் கொண்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் இருப்பதுபோன்று 'Username' ஆப்ஷனை மெட்டா கொண்டு வர உள்ளது. ஏற்கனவே, வாட்ஸ் அப்பில் நம்பர் ஆப்ஷன் மட்டும் உள்ளது. இந்நிலையில், வரக்கூடிய 'Username' ஆப்ஷன் பயனர்களின் செல்போன் எண் மற்ற பயனர்களுக்கு காட்டப்படாது.

மேலும், உங்கள் மொபைலில் பதியாத எண்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட எண்களுக்கும் கூட உங்களது வாட்ஸ் எண் காட்டப்படாது. இதன் மூலம் மொபைல் எண்கள் மூலம் நடக்கும் மோசடியை இது தடுக்கும்.

இருப்பினும், உங்கள் மொபைலில் பதிவு செய்யப்பட்ட நபர்களுக்கு உங்கள் மொபைல் நம்பர் காட்ட விரும்பினால், அதற்கு ஏற்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளலாம்.

அதாவது, பயனர்களுக்கு 'Username' அல்லது 'Phone Number' என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், திரையில் ஏதாவது ஒன்று தான் தோன்றும். Setting ஆப்ஷனுக்குள் சென்று profile- ஐ கிளிக் செய்து, அதற்கு வலதுபக்கத்தில் 'Create Username' என்ற ஆப்ஷன் இருக்கும்.

அங்கு, தங்களுக்கு விருப்பப்பட்ட Username-ஐ பயனர்கள் வைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews