வட்டாரக் கல்வி அலுவலர்கள் போட்டிதேர்வுக்கு விடைக்குறிப்பு வெளியீடு
சென்னை: வட்டாரக் கல்வி அலுவலர்களை தெரிவு செய்ய நடத்தப்பட்ட போட்டித் தேர்வின் விடைக்குறிப்பு இணைய தளத்தில் வெளியிடப்பட்டள்ளதால், அதன் மீது ஆட்சேபணை தெரிவிக்க விரும்புவோர் 10ம் தேதிக்குள் இணைய வழியில் தெரிவிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த மாதம் 10ம் தேதி, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்டது. அந்த தேர்வில் இடம் பெற்ற கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள்(A வகைக்குரியது) ஆசிரியர் தேர்வு வாரிய இணை தளமான www.trb.tn.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தற்காலிக உத்தேச விடைக்குறிப்பின் மீது ஆட்சேபணை தெரிவிக்க விரும்புவோர் அக்டோர் 3ம் தேதி முதல் 10ம் தேி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தள முகவரியில் மட்டுமே ஆதாரங்களுடன் பதிவு செய்ய வேண்டும். தபால் அல்லத பிறவழி முறையீடுகள் ஏற்கப்படமாட்டாது. அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களின் ஆதாரங்களை மட்டுமே அளிக்க வேண்டும். கையேடுகள்(Notes, Guides) ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தேர்வு எழுதிய நபர்கள் ‘A’ வகை கேள்வித்தாளுக்கு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள தற்காலிக விடைக்குறிப்புக்கு இணைய வழியில் ஆட்சேபணை தெரிவிக்கும் போது உரிய வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி அதற்குரிய சான்றாவணங்களை இணைக்க வேண்டும். சான்றாவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு ஏற்கப்பட்ட மாட்டாது. மாற்றுத் திறன் படைத்த தேர்வர்கள் பகுதி B-ல் வினா எண் 31 முதல் 180 வரை உள்ள கேள்விகளுக்கு மட்டுமே ஆட்சபேணை தெரிவிக்கலாம். பகுதி A-ல் உள்ள 1 முதல் 31 வரையிலான கட்டாயத் தமிழ் மொழிப் பகுதியின் கேள்விகளுக்கு எந்தவித ஆட்சேபணையும் மாற்றுத் திறன் படைத்தோர் தெரிவிக்கக் கூடாது. மேலும், பாட வல்லுநர்களின் முடிவே இறுதியானது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.