UG-NEET : இளநிலை நீட் தேர்வு பாடத்திட்டங்கள் வெளியீடு. UG-NEET : Publication of Undergraduate NEET Syllabus. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 10, 2023

Comments:0

UG-NEET : இளநிலை நீட் தேர்வு பாடத்திட்டங்கள் வெளியீடு. UG-NEET : Publication of Undergraduate NEET Syllabus.

UG-NEET : இளநிலை நீட் தேர்வு பாடத்திட்டங்கள் வெளியீடு.

இளநிலை நீட் தேர்வுக்கான பாடத்திட்ட விவரங்களைத் தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2024-25-ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு மே 5-ம் தேதி நாடு முழுவதும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையும் படிக்க | NEET UG syllabus for 2024 - 2025 | New Syllabus - PDF

நீட் தேர்வில் 180 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு அத்தேர்வு நடைபெறுகிறது. உயிரியல் பாடத்திலிருந்து 360 மதிப்பெண்களுக்கும், இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா 180 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் இடம்பெறும்.

இந்நிலையில், அதற்கான பாடத் திட்டங்கள் https://www.nmc.org.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கேள்விகள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews