புகைப்பட கண்காட்சியில் பங்களித்த மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் கவுரவிப்பு
சென்னை தினவிழாவில் வைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியில் பங்களித்த மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மேயர் ஆர்.பிரியா சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் ஒரு பகுதியாக சென்னை போட்டோ பியனாலே அறக்கட்டளை மூலம் செல்போன்களைப் பயன்படுத்தி புகைப்படங்களை எடுக்கும் 6 மாத கால புகைப்பட பயிற்சிப் பட்டறைகள் மாநகராட்சியின் புளியந்தோப்பு தொடக்கப் பள்ளி, பெரம்பூர் மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் நுங்கம்பாக்கம் ஸ்டெம் பள்ளி ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது. இதில், 65மாணவ, மாணவிகள் ஆர்வமுடன்கலந்து கொண்டு, புகைப்படங்களை எடுத்தனர்.
அந்த புகைப்படங்களை வைத்து`அக்கம் பக்கம்' என்ற தலைப்பில்ரிப்பன் மாளிகை வளாகத்தில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது. இக்கண்காட்சியை கடந்தஆக.22-ம் தேதி சென்னை தின விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்திறந்து வைத்தார். இக்கண்காட்சி நேற்றுமுன்தினம் (செப்.10) நிறைவடைந்தது.
இந்த கண்காட்சியில் இடம் பெற்றபுகைப்படங்களை எடுத்த மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி ரிப்பன்மாளிகையில் நேற்று நடைபெற்றது.அதில் மேயர் ஆர்.பிரியா பங்கேற்றுபாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி,அவர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், துணை ஆணையர் (கல்வி) ஷரண்யா அறி, கல்வி அலுவலர் வசந்தி பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.