கலைஞர் மகளிர் உரிமை திட்டம் சந்தேகங்களும் அதற்கான பதில்களும் FAQs தமிழக அரசு வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 22, 2023

Comments:0

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் சந்தேகங்களும் அதற்கான பதில்களும் FAQs தமிழக அரசு வெளியீடு



கலைஞர் மகளிர் உரிமை திட்டம் சந்தேகங்களும் அதற்கான பதில்களும் FAQs தமிழக அரசு வெளியீடு



1) எனக்கு ஏன் பணம் வரவில்லை?

உங்களது மனுவின் நிலை குறித்து 18/9/2023 முதல் அரசிடம் இருந்து குறுஞ்செய்தி அனுப்பப்படும். மேலும், உங்களது விண்ணப்பம் ஏற்கப்படவில்லை என்றால் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் எந்த விதிமுறைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்பதை தங்களது ஆதார் எண் மூலமாக லாகின் செய்து கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 2) அரசு குறுஞ்செய்தி வந்தது, ஆனால் வங்கியில் பணம் வரவில்லை?

உங்கள் வங்கி கணக்குடன் ஆதார் என் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்கவும். மேலும் இதுதொடர்பாக, தங்களது வங்கிக் கணக்கில் ரூபாய் ஆயிரம் பெறப்பட்டுள்ள விவரத்தினை தங்களது வங்கிக் கிளைக்குச் சென்று தங்களது வங்கி கணக்குப் புத்தகத்தினை கொடுத்து உரிய பதிவுகளை மேற்கொள்ள கோருவதன் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம்.

3) எனக்கு ஏன் அரசிடம் இருந்து குறுஞ்செய்தி வரவில்லை?

அரசிடம் இருந்து தங்களுக்கு குறுஞ்செய்தி ஏதும் வரப் பெறவில்லை எனில் தங்களது கைபேசியின் இயக்கத்தினை சரிபார்க்கவும். தங்களது விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கும் பட்சத்திலும் குறுஞ்செய்தி உடனே வராது. தங்களது மனுவின் நிலையை அறிய ஆதார் எண்ணை உள்ளீடு செய்து இணையதளத்தில் சரிபார்த்து தெரிந்து கொள்ளலாம்.

4) எப்போது மேல்முறையீடு செய்யலாம், எங்கு மேல்முறையீடு செய்யலாம்?

பதிவு செய்யப்பட்ட தங்களது கைபேசி எண்ணுக்கு தங்களது மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி வரப்பெற்று 30 நாட்களுக்குள் தாங்கள் தகுதி வாய்ந்த பயனாளி என்பதற்கான உரிய ஆதார ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலருக்கு இ-சேவை மையம் வழியாக மட்டுமே மேல்முறையீடு செய்ய வேண்டும்.

5) எனது விண்ணப்பம் எந்த காரணத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது?

19/9/2023 அன்று முதல் தங்களது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு தங்களது விண்ணப்பம் ஏற்கப்படாதற்கான காரணமானது குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும் இந்நேர்வில் தாங்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால் தங்களது தகுதிக்கான உரிய ஆதாரத்துடன் குறுஞ்செய்தி பெறப்பட்ட 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலருக்கு இ-சேவை மையத்தின் வாயிலாக மேல்முறையீட்டு விண்ணப்பம் செய்து கொள்ளலாம். 6) எனது வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்படவில்லை. எனக்கு பணம் கிடைக்குமா? இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ?

தாங்கள் தகுதி வாய்ந்த பயனாளிகளாக இருந்தால் உரிமைத் தொகை பெற வங்கிக்குச் சென்று வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும்.

7) ஒரு ரூபாய் வந்தவர்களுக்கு மட்டும்தான் உரிமை தொகை கிடைக்குமா அல்லது பத்து பைசா வந்தவர்களுக்கும் கிடைக்குமா?

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ள தகுதி வாய்ந்த பயனாளிகள் அனைவருக்கும் உரிமைத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

8)ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்கள் எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்?

ஏற்கனவே கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மனு செய்ய விண்ணப்பிக்காமல் விடுபட்டவர்கள், விண்ணப்பிக்க அரசால் அறிவிக்கப்படும் தேதியிலிருந்து தங்களது மனுவினை இ- சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம்.

9) கூட்டுறவு வங்கி, கிராம வங்கி, எச்.டி.எப்சி, போன்ற தனியார் வங்கிகளில் வங்கிக் கணக்கு வைத்திருந்து எங்களது விண்ணப்பத்தில் அந்த வங்கிக் கணக்கினை தெரிவித்து இருந்தால் எங்களுக்கும் மேற்கண்ட வங்கிகளில் பணம் செலுத்தப்படுமா?

கூட்டுறவு வங்கி தமிழ்நாடு கிராம வங்கி, ஹெச்டிஎஃப்சி போன்ற தனியார் வங்கி கணக்குகளுடன் மனுதாரர் தனது ஆதார் எண்ணினை இணைத்திருந்தால் தகுதியான பயனாளியாக இருப்பின் உரிமை தொகையானது அந்த வங்கிக் கணக்குகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். 10) Inactive Account கொடுத்து விண்ணப்பம் செய்துவிட்டேன். மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் ?

தங்களது வங்கியினை நேரில் அணுகி, வங்கி கணக்கினை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் அல்லது புதிய வங்கி கணக்கினை தொடங்கவேண்டும்.

11) எனது வங்கிக் கணக்கில், ஒரு ரூபாய் பணம் செலுத்தப்படும் போது ACHCR என்று குறிப்பிட்டு குறுஞ்செய்தி வந்திருக்கிறது, ஆனால் எனது உறவினருக்கு குறுஞ்செய்தியில் DBT Government payment என்று வந்திருக்கிறது. எனக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை கிடைக்குமா?

தாங்கள் தகுதியான பயனாளியாக இருப்பின் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையானது தங்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

12) ஒரு ருபாய் SMS வந்தது, ஆனால் பிறகு வங்கி கணக்கு Blocked என வருகிறது, பணம் வருமா ?

இந்நேர்வு தொடர்பாக தாங்கள் வங்கிக் கணக்கினை வைத்திருக்கும் வங்கியினை அணுகி தீர்வு பெற்றுக் கொள்ளலாம்

13) எனது ரேசன் அட்டை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளது. ஆனால் SMS வரவில்லை?

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தங்களது விண்ணப்பத்தினை உரிய வழியில் பதிவு செய்திருந்தால் தாங்கள் பிற தகுதிகளின் அடிப்படையில் தகுதி பெற்று இருப்பின் தாங்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவராவர். தங்களது மனுவின் நிலை குறித்து பதிவு செய்யப்பட்ட தங்களது தொலைபேசி எண்ணிற்கு 18.09.2023 முதல் குறுஞ்செய்தி வரும். இவ்வாறு குறுஞ்செய்தி ஏதும் வரப் பெறவில்லை எனில் தங்களது கைபேசி இணைப்பினை சரிபார்க்கவும்.

14) எனது வங்கி கணக்கில் 1 ரூபாய் ஏறி விட்டது ஆனால் SMS வரவில்லை?

தங்களது வங்கிக் கணக்கில் தொகை செலுத்தப்பட்டது குறித்த குறுஞ்செய்தி ஏதும் வரப் பெறவில்லை எனில் தங்களது தொலைபேசி இணைப்பினை சரிபார்க்கவும். 15) எனக்கு பணம் வரவில்லை, நான் மீண்டும் விண்ணப்பம் செய்யலாமா?

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தாங்கள் மீண்டும் புதியதாக விண்ணப்பம் செய்வதற்கு பதில் தங்களது மனு குறித்த நிலையினை பதிவு செய்யப்பட்ட தங்களது தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக வரப்பெற்ற நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை வழியாக சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலருக்கு மேல்முறையீடு செய்யலாம்.

16) நான் கைபேசி எண்ணை மாற்றி விட்டேன், update செய்ய என்ன வழி?

கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பயனாளியே தங்களது ஆதார் எண்ணை உள்ளீடு செய்து உரிய திருத்தங்களை மேற்கொள்ள ஏதுவாக இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.

17) கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் தேர்வானவர்களும், விண்ணப்பம் ஏற்கப்படாதவருக்கும் குறுஞ்செய்தி வருமா?

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தேர்வு பெற்றுள்ள அனைத்து மனுதாரர்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. திட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்யாத விண்ணப்பதாரர்களுக்கு 18/9/2023 முதல் தங்களது விண்ணப்பத்தின் நிலை குறித்து குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும் 18) அரசால் அளிக்கப்பட்ட வீட்டில் வசிக்கிறேன், எனக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்குமா?

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் உரிமை தொகையாக ரூபாய் ஆயிரம் பெற விதிக்கப்பட்ட நெறிமுறைகளின் கீழான பிற தகுதிகளைப் பெற்றிருப்பின் அரசால் அளிக்கப்பட்ட வீடு தடையாக இருக்காது.

19) மனு நிராகரிக்கப்பட்டிருந்தால் எத்தனை நாட்களில் மீண்டும் விண்ணப்பிக்கலாம்?

தங்களது மனு நிராகரிக்கப்பட்டிருந்தால், நிராகரிக்கப்பட்ட குறுஞ்செய்தி வந்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையங்களின் வாயிலாக சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலருக்கு மேல்முறையீடு செய்யலாம்.

20) எவ்வாறு மேல்முறையீடு செய்வது?

தங்களது மனு நிராகரிக்கப்பட்டிருந்தால், நிராகரிக்கப்பட்ட குறுஞ்செய்தி வந்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையங்களின் வாயிலாக சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலருக்கு மேல்முறையீடு செய்யலாம்.

21) கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் நோக்கம் என்ன இத்திட்டம் எதற்காக துவங்கப்பட்டது?

கலைஞர் மகளிர் உரிமை திட்டமானது இரண்டு முக்கிய நோக்கங்களை கொண்டது

குடும்பத்திற்காக வாழ்நாள் எல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு கொடுக்கும் அங்கீகாரம் தான் இதனுடைய முதன்மையான நோக்கமாகும்.

ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை என்பது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வாழ்க்கை தரத்தை உயர்த்தி சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழி வகுக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் அடுத்த நோக்கமாகும். 22) இத்திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவி என வரையறுக்கப்படுபவர்கள் யார்?

குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவர்.

i) ஒவ்வொரு தகுதி வாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத் தலைவி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்.

ii) குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார்.

iii) குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்தக் குடும்பத் தலைவரின் மனைவி குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார்.

iv) குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவரின் மனைவியின் பெயர் ஏதேனும் காரணத்தினால் இல்லாத பட்சத்தில், குடும்பத்திலுள்ள இதர பெண்களில் ஒருவர் குடும்பத்தலைவியாக கருதப்படுவார். ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், இத்திட்டத்தின்கீழ் பயன்பெற, ஒரு நபரைக் குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம்.

v) திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவர்.

23) ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற யார் விண்ணப்பிக்க வேண்டும்?

ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒரு நபரை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். 24) இத்திட்டத்தின் கீழ் பயன் பெற தேவையான பொருளாதார அளவுகோல்கள் என்ன?

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கும் குடும்பங்கள் கீழ்க்காணும் மூன்று பொருளாதார அளவுகோல்களுக்கு உட்பட்ட குடும்பங்களாக இருத்தல் வேண்டும்.

i) ஆண்டுக்கு ரூ.2.5 இலட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.

ii) ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்.

iii) ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்.

25) இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் போது தகுதிகளுக்காக தனியாக வருமானச் சான்று அல்லது நில ஆவணங்கள் போன்ற ஆதாரங்களை பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டுமா?

பொருளாதாரத் தகுதிகளுக்காகத் தனியாக வருமானச் சான்று அல்லது நில ஆவணங்களைப் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கத் தேவையில்லை.

CLICK HERE TO READ FULL DETAILS

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews