சங்கரா பாலிடெக்னிக் கல்லூரியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்
கோவை மாவட்ட தனியார் வேலைவாய்ப்பு முகாம், இளைஞர் திறன் திருவிழா ஆகியவை சரவணம்பட்டியில் உள்ள சங்கரா பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 30) நடைபெறவுள்ளன.
இது குறித்து, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் சங்கரா பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம் செப்டம்பர் 30 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
இதில், DDUGKY, RSETI, TNSDC திட்டங்களின்கீழ் நடைபெ றும் இலவச திறன் பயிற்சியில் DDUGKY திட்டத்தின்கீழ் ரெஸ் டாரன்ட் கேப்டன், செக்யூரிட்டி சூப்பர்வைசர், ஃபெசிலிட்டி மேனேஜ்மென்ட் எக்சிகியூட்டிவ், ரீடெயில் சேல்ஸ் அசோஷியேட் உள்ளிட்ட பயிற்சிகள், RSETI திட்டத்தின்கீழ், பியூட்டி பார்லர் மேனேஜ்மென்ட், வுமன்ஸ் டெய்லர், கேன்டில் மேக்கிங், காஸ்டியூம் ஜுவல்லரி உள்ளிட்டபயிற்சிகள் TNSDC திட்டத்தின்கீழ் ஆட்டோ மோட்டிவ், டெக்ஸ்டைல்ஸ் &ஹேண்ட்லூம்ஸ் உள்ளிட்ட பயிற் சிகள் நடைபெறவுள்ளன.
இந்த வேலைவாய்ப்பு முகாம், இளைஞர் திறன் திருவிழாவில் 50-க்கும்மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவ னங்கள் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளனர். இதில், 8 ஆம் வகுப்பு முதல் இளங்கலை, முதுகலை தொழில்நுட் பக் கல்வி, பட்டயப் படிப்பு, ஐடிஐ பயின்றவர்கள் கலந்துகொள்ள லாம்.எனவே, 18 முதல் 35 வரையுள்ள வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர்கள் கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை, சுயவிவர குறிப்பு, புகைப்படம், இதர தகுதிச் சான்றுகளுடன் (அசல், நகல்) கலந்து கொண்டு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு மற்றும் நேரடி வேலைவாய்ப்பை பெற்று பயனடையலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.