மாணவர் வெளிநாடுகளில் படிக்க வாய்ப்பு: தகுதித்தேர்வுக்கு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 27, 2023

Comments:0

மாணவர் வெளிநாடுகளில் படிக்க வாய்ப்பு: தகுதித்தேர்வுக்கு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்



ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர் வெளிநாடுகளில் படிக்க வாய்ப்பு: தகுதித்தேர்வுக்கு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் தாட்கோ மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் அயல் நாடு சென்று புகழ் பெற்ற பல்கலைக் கழகங்களில் உயர் கல்வி படிக்க தகுதித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொறியியல் மற்றும் மேலாண்மை, தூய அறிவியல் மற்றும் பண்பாட்டு அறிவியல், வேளாண் அறிவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல், சர்வதேச வர்த்தகம், பொருளாதார, கணக்கியல், நிதி, மனித நேயம், சமூக அறிவியல், நுண்கலை சட்டம், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட படிப்புகளை அயல் நாடுகளில் படிக்க விரும்புபவராக இருக்க வேண்டும்.

குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான நிதியுதவி தாட்கோவால் வழங்கப்படும். பயிற்சி முடித்து தேர்ச்சி பெறுவதன் மூலம் மாணவ, மாணவிகள் தாங்கள் விரும்பும் வெளி நாடுகளிலுள்ள கல்வி நிறுவனத்தில் மேல் படிப்பை தொடர்வதற்கு வாய்ப்பு பெறலாம். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews