12ம் வகுப்பு முடித்திருந்தாலே போதும்.. மத்திய அரசில் வேலை - மொத்த பணியிடங்கள் - 7547 - விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.09.2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 03, 2023

Comments:0

12ம் வகுப்பு முடித்திருந்தாலே போதும்.. மத்திய அரசில் வேலை - மொத்த பணியிடங்கள் - 7547 - விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.09.2023

12ம் வகுப்பு முடித்திருந்தாலே போதும்.. மத்திய அரசில் வேலை இருக்கு..!

விண்ணப்பிப்பது எப்படி?

SSC Recruitment 2023:

மத்திய அரசு பணியாளர் தேர்வாணைத்தில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன என்பது பற்றி காணலாம்.

டெல்லி காவல் துறையில்  காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பை அரசு பணியாளர் தேர்வாணையம் (The Staff Selection Commission) வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்

கான்ஸ்டபிள் (ஆண், பெண்)

பெண்கள் -2,491

மொத்த பணியிடங்கள் - 7547 

எப்படி விண்ணபிப்பது?

https://ssc.nic.in - என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

இதற்கான விண்ணப்பக் கட்டணமா ரூ.100 செலுத்த வேண்டும். பழங்குடியினர்/ பட்டியில் பிரிவினர்,  முன்னாள் ராணுவத்தினர்,  மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

கல்வித் தகுதி:

இதற்கு விண்ணப்பிக்க 12-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; LMV பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு :

இதற்கு விண்ணப்பிக்க 01.07.2023 படி 18 வயது நிரம்பியவர்களாகவும் 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.  விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

முதலில் Notices | Staff Selection Commission | GoI (ssc.nic.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். home page- ல் Apply என்பதை கிளிக் செய்யவும்.

SSC Constable Post’, Apply என்பதை கிளிக் செய்யவும்

முதல் முறை விண்ணப்பம் செய்வோர் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின் பயனாளர் ஐடி உருவாக்கப்படும் 

ஐடி உருவாகியதையடுத்து, லாக் இன் செய்து அப்ளை செய்யவும்

புதிதாக உள்ள விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ளவற்றுக்கு சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும் 

விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்

தேர்வு செய்யப்படும் முறை:

கணினி வழியில் நடைபெறும் எழுத்துத் தேர்வு நடைபெறும்.  இதில், தேர்ச்சி பெற்றவர்கள் உடற்தகுதி தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.  முழு விவரம் அறிய:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Final_Notice_CEDP2023_01092023.pdf - என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

எழுத்துத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.09.2023

ஆன்லைனில் தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள் - 30.09.2023 - இரவு 11 மணி வரை

விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய கடைசி நாள் - 30.10.2023 - 04.10.2023 இரவு 11 மணி வரை

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் - டிசம்பர், 2023 (எழுத்துத் தேர்வு தேதி குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.)

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews