அரசுப் பள்ளி To ஆதித்யா எல்1.. இஸ்ரோவில் ஆதிக்கம் செலுத்தும் தமிழர்கள்.. யார் இந்த தென்காசி நிகர்ஷாஜி ? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 02, 2023

Comments:0

அரசுப் பள்ளி To ஆதித்யா எல்1.. இஸ்ரோவில் ஆதிக்கம் செலுத்தும் தமிழர்கள்.. யார் இந்த தென்காசி நிகர்ஷாஜி ?

*நாளை விண்ணிற்கு செல்லும் ஆதித்யா எல் -1;* *தமிழகமே திரும்பி பார்க்கும் நிகர்ஷாஜி.*

- யார் இவர்..?


ஆதித்யா எல் - 1 செயற்கைக்கோளின் திட்ட இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த ஒரு பெண்மணி ஒருவர் பணியாற்றியுள்ளார்..

இவர் தற்போது ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனராக செயல்பட்டு வருகிறார். *யார் இந்த நிகர்ஷாஜி?*

தென்காசி மாவட்டம், செங்கோட்டை பகுதியை சேர்ந்த சேக் மீரான்-சைத்தூன் பீவி தம்பதியினரின் 2-வது மகள் நிகர்சுல்தான் ஆவார். இவரது தற்போதைய பெயர் -நிகர்ஷாஜி.

இவர் செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1978-79-ஆம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பயின்று 433 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக திகழ்ந்துள்ளார்.

அதேபோல், 12-ம் வகுப்பில் 1980-81 ஆம் கல்வியாண்டில் 1008 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக திகழ்ந்துள்ளார்.

அதன்பின் நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் தனது பொறியியல் படிப்பை முடித்த நிகர்ஷாஜி 1987- ஆம் ஆண்டு இஸ்ரோவில் பணியில் சேர்ந்துள்ளார்.
தற்போது, பணியில் சேர்ந்து 36 ஆண்டுகள் ஆகியுள்ள சூழலில், ஆதித்யா எல்-1 திட்டத்திற்கு இஸ்ரோ நிர்வாகத்தால் திட்ட இயக்குனராக அறிவிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகர்ஷாஜியின் சகோதரர் சேக்சலீம் என்பவர் ஐ.ஐ.எம்.மில் விஞ்ஞானியாகவும், தொடர்ந்து தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் பேராசிரியராகவும், தொடர்ந்து துறை தலைவராகவும் பணியாற்றியவர். அதேபோல், நிகர்ஷாஜியின் தங்கை ஆஷா என்பவர் கேரளாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

நிகர்ஷாஜியின் கணவர் ஷாஜகான் துபாயில் பொறியாளராக பணியாற்றி வரும் நிலையில், அவரது மகன் முகமது தாரிக் நெதர்லாந்து நாட்டில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

மகள் தஸ்நீம் மங்களூரில் எம்.எஸ் மருத்துவம் பயின்று வரும் நிலையில், தற்போது நிகர்ஷாஜி தனது குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews