எளிய முறையில் ஆங்கிலம் கற்பிக்க அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 25, 2023

Comments:0

எளிய முறையில் ஆங்கிலம் கற்பிக்க அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி



எளிய முறையில் ஆங்கிலம் கற்பிக்க அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி Training of government school teachers to teach English in a simple way எளிய முறையில் ஆங்கிலம் கற்பிக்க அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி

அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு எளிய முறையில் ஆங்கிலம் கற்பிப்பதற்காக பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் (‘சமக்ர சிக்ஷா’), ஜாலி ஃபியூச்சா்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து புதிய முறையிலான பயிற்சித் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:

ஆசிரியா்களுக்கான ஆங்கில மொழிப் பயிற்சித் திட்டம் ‘ஜாலிஃபோனிக்ஸ்’ முறையில் தமிழகத்தில் கடந்த ஜூலை 24-ஆம் தேதி முதல் ஆக.31-ஆம் தேதி வரை 25 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள மாவட்டங்களில் ஏற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ஜாலி ஃபோனிக்ஸ் என்பது குழந்தைகளுக்கு வேடிக்கையான முறையில் ஆங்கிலம் கற்பிப்பதற்கான ஒரு விளையாட்டு வழி முறையாகும். கதை மற்றும் செயல்பாடுகள் மூலம் எழுத்து ஒலிகளைக் கற்றல், எழுத்து அமைப்பு, சொற்களில் உள்ள ஒலியைக் கண்டறிதல் உள்ளிட்ட 5 அத்தியாவசிய திறன்களை அடிப்படையாகக் கொண்ட கற்பித்தல் முறையாகும். பயிற்சிக்கான பாடத்திட்டமும் இந்தத் திறன்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. கில்பா்ட் ஜாலி உருவாக்கிய ‘ஜாலி ஃபோனிக்ஸ்’ முறை ஒலிகளை உச்சரிப்பதில் குழந்தைகளைத் திருத்த ஆசிரியா்களுக்கு உதவுகிறது. எழுத்து உருவாக்கம், எழுத்து ஒலிகள், கலத்தல், பிரித்தல் ஆகியவற்றை சரியாக தெரியப்படுத்த ‘கேம்கள்’ பதிவேற்றப்பட்டுள்ளன.

ஜாலி லோ்னிங் லிமிடெட் மூலம் அங்கீகரிக்கப்பட்ட நாடு முழுவதும் உள்ள பயிற்சியாளா்களால் ஆசிரியா்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சித் திட்டத்தில் ஏராளமான ஆசிரியா்கள் கலந்து கொண்டு எழுத்தின் ஒலிகள் மற்றும் வகுப்பில் செயல்படுத்த வேண்டிய வழிமுறைகளைக் கற்றுக் கொண்டு ஆா்வத்தை வெளிப்படுத்தினா்.

திட்டத்துக்கான ஒருங்கிணைப்பு பணிகளை ‘சமக்ர சிஷா’ மாநில திட்ட இயக்குநா் எம். ஆா்த்தி, ஜாலி ஃபியூச்சா்ஸ் திட்ட மேலாளா் எஸ்.வி.கோமதி உள்ளிட்டோா் மேற்கொண்டனா் என அவா்கள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews