அரசு பள்ளிகளில் செப்.1-ல் எஸ்எம்சி குழு கூட்டம்: இடைநின்ற மாணவர்களை கண்டறிய அறிவுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 28, 2023

Comments:0

அரசு பள்ளிகளில் செப்.1-ல் எஸ்எம்சி குழு கூட்டம்: இடைநின்ற மாணவர்களை கண்டறிய அறிவுறுத்தல்

அரசு பள்ளிகளில் செப்.1-ல் எஸ்எம்சி குழு கூட்டம்: இடைநின்ற மாணவர்களை கண்டறிய அறிவுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம், செப். 1-ம் தேதிநடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இயங்கி வரும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. அதன்படிபெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சிப் பிரதிநிதி மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய 20 உறுப்பினர்கள் கொண்ட குழுவாக எஸ்எம்சி மாற்றி அமைக்கப்பட்டது. இதுதவிர பள்ளிகளில் எஸ்எம்சி கூட்டம்மாதந்தோறும் முதல் வெள்ளிக் கிழமை நடத்தப்பட்டு பள்ளி வளர்ச்சிக்கான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, செப்டம்பர் மாதத்துக்கான பள்ளி மேலாண்மைக் குழுகூட்டம், வரும் 1-ம் தேதி மாலை 3முதல் 4.30 மணி வரை நடைபெறஉள்ளது. இதில் பள்ளி வளர்ச்சிப்பணிகள், பள்ளி செல்லாத இடைநின்றவர்களைக் கண்டறிதல், நிதி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. குறிப்பாக 6 முதல் 18 வயதுடைய இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் மாணவர்களைக் கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வழிசெய்ய வேண்டும்.

வருகைப்பதிவு அடிப்படையில் 15 நாட்களுக்குமேல் பள்ளிக்குவராதவர்களை இடைநின்றவர்களாக கருதி, அவர்களை தொடர்புகொண்டு கல்வியை தொடர்வதற்கான பணிகளை குழு முன்னெடுக்க வேண்டும். எஸ்எம்சி குழுவில்உள்ள ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட உறுப்பினர்கள்100 சதவீதம் கூட்டத்தில் பங்கேற்பதை உறுதிசெய்ய வேண்டும்.

இதில் எடுத்த முடிவுகளை தீர்மானங்களாக நிறைவேற்றி தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும், எஸ்எம்சி குழு கூட்ட விவரங்களை தொகுப்பு அறிக்கையை இயக்குநரகத்துக்குச் சமர்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews