பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் நடத்த முடிவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 05, 2023

Comments:0

பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் நடத்த முடிவு

பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்

அரசுப் பள்ளிகளில் மிக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி கடந்த 11 ஆண்டுகளாக பல கட்ட போராட்டங்களை நடத்தியும் எங்களது கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என வரிசை எண் 181 ல் அறிவித்திருந்தது.ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் முடிவடையும் நிலையிலும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் கடந்த ஆட்சியில் எந்த நிலையில் இருந்தோமோ அதே நிலையில் தான் இன்று வரை இருக்கின்றோம்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நாங்களும் மாண்புமிகு அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பல முறை மனுக்கள் கொடுத்தும்,பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை.
IMG-20230804-WA0016
இந்நிலையில் எங்கள் கோரிக்கைகளை அரசுக்கு மீண்டும் நினைவூட்டும் விதமாக வருகின்ற செப்டம்பர் மாதம் காலாண்டு விடுமுறையில் சென்னையில் மாபெரும் தொடர் போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக அரசு எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும் என வேண்டுகோள் வைக்கின்றோம்.

பழ.கௌதமன்

மாநில தலைவர்

ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம்..

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84688425