4 நாட்களாக போராடி வரும் பகுதிநேர மாற்றுத்திறனாளி ஆசிரியர்களை அழைத்துப் பேசி கோரிக்கையை நிறைவேற்ற தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்
அரசாணை 151 ஐ நிறைவேற்றக் கோரி நான்கு நாட்களாக போராடி வரும் பகுதிநேர மாற்றுத் திறனாளி ஆசிரியர்களை அழைத்துப் பேசி அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுமாறு தமிழக முதல்வருக்கு ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் வேண்டுகோள்
மாற்று திறனாளி பகுதிநேர ஆசிரியர்கள் அரசாணை 151 ன் படி தங்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி சென்னை,நுங்கம்பாக்கம்,பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் கடந்த 14 ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உண்ணாவிரதப் போராட்டமாக தொடங்கினார்கள்.
அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று இரண்டாவது நாள் உண்ணாவிரதத்தை கை விட்டு காத்திருப்பு போராட்டமாக தொடர்ந்தார்கள்.இன்று நான்காவது நாள் ஆகியும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் இன்று முதல் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றி உள்ளனர்.
மாற்றுத் திறனாளிகள் துறையை தன் வசம் வைத்திருக்கும் மாண்புமிகு.முதல்வர் அவர்களே எங்கள் சகோதரர்களின் நியாயமான கோரிக்கையை பரிசீலித்து அவர்களுக்கு நல்வழி காட்டும் படி கேட்டுக் கொள்கின்றேன்.
நடக்க முடியாதவர்கள்,பார்வைத் திறன் குறைபாடு உள்ளவர்கள் எல்லாம் மிகுந்த சிரமங்களுக்கு இடையே தங்களை வருத்தி போராடிக் கொண்டிருக்கின்றனர்.அவர்களை அழைத்து பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள்.
பழ.கௌதமன் மாநிலத் தலைவர் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.