நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நடந்த பாராட்டுவிழா - Press Release date 12.08.2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 13, 2023

Comments:0

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நடந்த பாராட்டுவிழா - Press Release date 12.08.2023

செ.வெ.எண்: 52

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் பாராட்டு விழா.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் பாராட்டு விழா. மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி,அவர்கள், நீட் தேர்வில் வென்றவர்களை பாராட்டியதுடன், சாதனையாளர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு உள்ள பங்களிப்பை வாழ்த்தினார்.

மகத்தான (12.08.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், தங்களது மன உறுதி, கடின உழைப்பு, தன்னம்பிக்கை ஆகியவற்றால் எதையும் சாதிக்கும் திறமையும், திறனும் தங்களுக்கு இருப்பதை நிரூபித்துள்ளனர் என்று கூறினார். "இன்றைய உலகம் போட்டி நிறைந்தது. அதில் வெறும் பட்டங்களைப் பெறுவது மட்டும் போதாது. நமது இளைஞர்கள் போட்டியிட வேண்டும். அப்போது தான் சிறந்தவர்கள் வெளிப்படுவார்கள். நமது மாநிலத்தில், ஏதே அறிவுக்குறைபாடுள்ளது போல, "நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாது" என்ற போலியான தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இது மிகவும் நியாயமற்றது. இன்று நீட் தேர்வில் முதலிடம் பெற்றவர் நமது மாநிலத்தைச் சேர்ந்தவர். இது நமக்கெல்லாம் பெருமை மட்டுமின்றி நீட் தேர்வு பற்றிய கட்டுக்கதையை போக்கியுள்ளது. நமது இளம் மாணவர்கள் உலகிலேயே சிறந்தவர்கள்.

கடைகோடி நபருக்கும் சுகாதார வசதிகள் வலிமையான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஆரோக்கியே முதன்மையான தேவை. இந்தியாவின் சுகாதார சேவைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் மாற்றத்தை சந்தித்து வருகின்றன. இன்று, சுகாதார வசதிகள் மிகவும் நீட் எதிர்ப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த மாண்புமிகு ஆளுநர், இந்த மசோதா மாண்புமிகு குடியரசு தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது ஒத்திசைவு பட்டியல் விவகாரமாக இருப்பதாலும், மாண்புமிகு குடியரசு தலைவரே அதன் மீதான முடிவை எடுக்கக் கூடியவராகவும் இருப்பதாக தெரிவித்தார். அதே சமயம், தாமாக இருந்தால் நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு ஒருபோதும் ஒப்புதல் அளிக்க மாட்டேன் எனக் கூறிய அவர், அறிவில் பிரகாசமான நமது குழந்தைகள் அறிவுசார் குறைபாடு கொண்டவர்களாக உணர்வதை நான் விரும்பவில்லை என்றும் திறமையாகவும் புத்திசாலித்தனமாகவும் தேர்வை எழுதி சிறந்தவர்களாக அவர்கள் விளங்க வேண்டும் என்று விரும்புவதாகவும் தெரிவித்தார்.

நீட் பயிற்சி நிலையங்களில் பயிற்சி அவசியமா?

"நீட் தேர்வுக்கு பயிற்சி தேவை" என்பது ஒரு கட்டுக்கதை. எந்த பயிற்சியும் இல்லாமல் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் உள்ளனர். ஏனென்றால் பள்ளியில் அவர்களின் ஆசிரியர்கள் அந்த மாணவர்களுக்கு நன்றாக கற்பித்துள்ளனர். கற்பித்தல் தரம் குறைவாக இருக்குமானால், தேர்வுகளை குறை கூறக் கூடாது. அதற்குத் தீர்வாக அந்த கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று ஆளுநர் குறிப்பிட்டார்.

"நீட் இல்லாத போது நாங்கள் நன்றாக விளங்கினோம்" என்ற தவறான எண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு முன், அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் எண்ணிக்கை 200க்கும் குறைவாகவே இருந்தது. 2016-17ல், நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டபோது, அந்த எண்ணிக்கை குறைந்தது. பின்னர் 7.5% இடஒதுக்கீடுக்கான அவசர சட்டத்தை அரசு கொண்டு வந்தது. அதன் மூலம் நலிந்த பிரிவைச் சேர்ந்த அரசு பள்ளிகளின் தகுதியான மாணவர்கள் தங்கள் கனவுகளை ஒருவேளை எவ்வாறான சந்தர்ப்பத்திலோ நீங்கள் தேர்வில் தவறியிருந்தால், நீங்கள் சிறந்து விளங்க மேலும் துறைகள் உள்ளன. உங்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இருந்தால், நீங்கள் எந்தத் துறையிலும் சிறந்து விளங்கலாம் என்று ஆளுநர் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews