காலாண்டு, அரையாண்டு தேர்வு எப்போது? - உத்தேச காலஅட்டவணை When is quarter and half year exam? - Proposed timetable
நடப்பு கல்வி ஆண்டில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற உள்ள காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகளுக்கான உத்தேச காலஅட்டவணை வெளியாகியுள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அ.மார்ஸ், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12-ம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டில் (2023-24) பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. மாணவர்கள் நலன் கருதி, அதற்கான உத்தேச கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வுகள் செப்.15 முதல் 27-ம் தேதி வரையும், அரையாண்டு தேர்வுகள் டிச.11 முதல் 22-ம் தேதி வரையும் நடைபெறும். 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 3-வது வாரத்தில் நடத்தப்படும்.
இதுதவிர 10, 11, 12-ம் வகுப்புக்கான அலகு மற்றும் திருப்புதல் தேர்வுகள், 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான பருவத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற விவரமும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றை பின்பற்றி மாணவர்களை தேர்வுகளுக்கு தயார்படுத்த அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அ.மார்ஸ், அனைத்துபள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
year planner letter - CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.