ரூ.1,000 உரிமைத் தொகை:ஜூலை 20 முதல் டோக்கன் விநியோகம் Rs.1,000 Entitlement Amount: Token distribution from 20th July
மகளிருக்கு ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்குவதற்கான டோக்கன்கள், விண்ணப்ப விநியோகம், ஜூலை 20-ஆம் தேதி தேதி முதல் தொடங்கும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் என்.சுப்பையன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட சுற்றறிக்கை விவரம்:
மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம், செப்டம்பா் 15-ஆம் தேதி தொடங்கப்படுகிறது. இதற்காக நிகழ் நிதியாண்டில் ரூ. 7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை, விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், உரிமைத் தொகை வழங்கும் பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியா்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
டோக்கன்கள்-விண்ணப்பங்கள்: உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள், பூா்த்தி செய்த படிவங்களை முகாம்களுக்கு வந்து அளிப்பதற்கான தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய டோக்கன்கள் உள்ளிட்டவை விநியோகம் செய்யப்பட உள்ளன. வீடு வீடாக விண்ணப்பங்கள், டோக்கன்கள் அளிக்கும் பணிகளை ஜூலை 20-ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும்.
முன்னதாக, முகாம் நடக்கும் இடம், எந்தெந்த அட்டைதாரா்கள் எந்தெந்த நாளில் முகாமில் பங்கேற்பது போன்ற விவரங்களை படிவத்தில் குறிப்பிட வேண்டும். இதற்கான எழுத்துப் பணியை ஜூலை 18-ஆம் தேதி தொடங்க வேண்டும். மேலும், முகாம் நடக்கும் இடம் குறித்து நியாயவிலைக் கடைளில் தமிழில் பலகை அமைக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.