ஆசிரியர் பணி கற்பித்தலே! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 13, 2023

Comments:0

ஆசிரியர் பணி கற்பித்தலே!

ஆசிரியர் பணி கற்பித்தலே

முன்பெல்லாம் கல்வி கற்பதற்காக குருவை தேடி மாணவர்கள் சென்று கற்கும் நிலை இருந்து வந்தது. தற்போது அரசு நடவடிக்கையால் பள்ளிகள் இல்லாத கிராமங்கள் அரிதாகிவிட்டன. அரசு உயர்நிலைப் பள்ளிகளும், அரசு மேல்நி லைப் பள்ளிகளும் கண்ணுக்கெட்டும் தொலைவில் வந்துவிட்டன. இவையெல்லாம் ஏழை, பணக்காரர் என்கிற வேறுபாடின்றி அனைத்து மாணவர்களும் கல்வியறிவு பெற வேண்டும் என்ற நல்ல நோக்கிற்காகத்தான் கொண்டுவரப்பட்டன.

இப்படி கல்வி அறிவை பெருக்குவதற்கான வாய்ப்பு வசதிகளை அரசு கொடுத்து இருக்கும் சூழலில், பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களின் நெறிபிறழ் பழக்க வழக்கங்களால் ஆசிரியர்கள் பெரிதும் அவதியுற்று வருவதை நாள்தோறும் சமூக ஊடகங்களில் வெளியாகும் வீடியோ காட்சிகள் மூலம் நம்மால் உணர முடிகிறது. இப்படிப்பட்ட காட்சிகளை பார்க்கும் போதெல்லாம் நம் நெஞ்சம் பதைபதைக்கிறது. ஒரு சமூகத்தை உயர்த்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பில் அமர்ந்திருக்கும் ஆசிரியர்களின் இந்த அவல நிலையை நினைத்து வருந்துவதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

மாணவர்களின் தேர்வு முடிவு சிறப்பானதாக அமைய வேண்டும் என அரசு ஆசைப்படுகிறது. ஆனால் அந்த சிறப்பானதொரு தேர்வு முடிவை கொடுக்க தவறினால் ஆசிரியரை சம்பந்தப்பட்ட கல்வித்துறை கண்டிக்கிறது.

ஆசிரியரை கல்வித்துறை கண்டிப்பது போல் மாணவர்களை ஆசிரியர்களால் கண்டிக்க முடியவில்லை. ஓரளவேனும் கண்டிப்பு இருந்தால்தான் மாணவர்களின் சுற்றலை மேம்படுத்த முடியும் என்ற சூழலில் அதற்கான வாய்ப்பு ஆசிரியர்களுக்கு இல்லாத போது அதிகபட்ச தேர்ச்சியை எவ்வாறு கொடுக்க முடியும்?

எந்த பிரச்னை என்றாலும் அதை ஆசிரியர்களே சமாளித்துக் கொள்ள வேண்டும் என கல்வித்துறை நினைப்பதால் கற்றலின் தரம் பாதிக்கப்பட்டு வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். இன்றைய மாணவர்களின் செயல்பாடு இப்படியாகத்தான் இருக்கும். ஆசிரியர்கள்தான் அனுசரித்துச் செல்ல வேண்டும்' என்று அரசியல்வாதிகள் பலரும் மேடையிலே பேசும்போது ஆசிரியர்கள் என்ன தான் செய்வார்கள்? ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்கு மதிப்போ மரியாதையோ ஏற்படுமா? நிச்சயம் ஏற்படாது.

சரி மாணவர்களின் பண்பாடு மாறி விட்ட இச்சூழலில் ஆசிரியர்களுக்கு ஒதுக் கப்பட்ட அந்த கற்பித்தல் பணியை முழு மையாக ஆசிரியர்களால் செயல்படுத்த முடிகிறதா என்றால் அதுவும் இல்லை.

கற்பித்தல் பணியைத் தாண்டி எண்ணற்ற பணிகளை ஆசிரியர்கள் மேல் கல்வித்துறை சுமத்தி வருவதால் ஆசிரியர்களின் கற்பித்தல் பணி மிகவும் பாதித்து வருவதாக கல்வி ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

காலை பள்ளிக்கு செல்வது முதல் மாலை பள்ளியை விட்டுகிளம்பும் வரை கற்பித்தல் பணியை காட்டிலும் அதிக அளவில் கற்பித்தல் சாராத பணிகள் (ஓர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் போல) ஆசிரியர்களால் செய்யப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews