MBBS/BDS 7.5 % ஒதுக்கீடு: மருத்துவக் கல்வி இயக்ககம் விளக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 01, 2023

Comments:0

MBBS/BDS 7.5 % ஒதுக்கீடு: மருத்துவக் கல்வி இயக்ககம் விளக்கம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் 7.5 % ஒதுக்கீடு: மருத்துவக் கல்வி இயக்ககம் விளக்கம்

மருத்துவப் படிப்புகளுக்கு அரசுப் பள்ளி மாண வர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் ஒப்புகைச் சான்று (போனஃபைட்) சமர்ப்பிப்பது குறித்து மருத்துவக் கல்வி இயக்ககம் தெளிவுபடுத்தியுள்ளது.

பொதுவாக, எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு அரசுப் பள்ளி இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், தாங்கள் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில்தான் பயின்றோம் என்பதை உறுதி செய்வதற்கு பள்ளியின் மூலம் வழங்கப் பட்ட ஒப்புகை சான்றினை (போனஃபைட்) சமர்ப்பிக்க வேண்டும். இந்த நிலையில், எந்த ஆண்டில் பிளஸ் 2 படிப்பை நிறைவு செய்த வர்கள் அதைச் சமர்ப்பிக்க வேண்டும், எந்த ஆண்டில் நிறைவு செய் தவர்களுக்கு அது தேவையில்லை என்பது தொடர்பாக மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்கக மாணவர் சேர்க்கை செயலர் வெளியிட்ட அறிவிக்கை:

நிகழாண்டிலும், கடந்த ஆண்டிலும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர் கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும்போது ஒப்புகைச் சான்றை இணைக்கத் தேவையில்லை என்று ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (சமக்ர சிக்ஷா) திட்ட இயக்குநர் தகவல் அனுப்பியுள்ளார்.

அவர்களது தகுதிச் சான்று பள்ளிக் கல்வி தகவல் மேலாண்மை கட்டமைப்பு (எமிஸ்) தளத்தின் வாயிலாக சரிபார்த்துக் கொள்ளப்ப டும். அதேவேளையில் கடந்த ஆண்டுக்கு முன்பாக பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைவரும் ஒப்புகைச் சான்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews