தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு அறிக்கை - தேதி: 30.06.2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 01, 2023

Comments:0

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு அறிக்கை - தேதி: 30.06.2023

Tamil Nadu Government Employees Teachers Welfare Association Report - Dated: 30.06.2023 - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு அறிக்கை - தேதி: 30.06.2023

பெறுநர்

மாண்புமிகு சுகாதாரத்துறை, அமைச்சர் அவர்கள்


தமிழ்நாடு அரசு

மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு வணக்கம்!

சிறப்பாக செயலாற்றிவரும் மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

சுகாதாரத்துறையில் பன்நோக்கு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும், கொரோனா காலத்தில் பொது சுகாதார நிறுவனத்தில் பணியாற்றி ஊக்க ஊதியம் வழங்கப்படாதவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும், மருத்துவத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்த ஊதியத்தில் பணியாற்றும் செவிலியர்களை படிப்படியாக பணி நிரந்தரம் செய்துவருகிறீர்கள் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நன்றியை தெரிவித்துக் கொண்டு மேலும் உள்ள ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,

மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதை போன்று அடிப்படை பணியாளர்களுக்கும் ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு தடத்தவேண்டும், தேசிய நல வாழ்வு சங்க டேட்டா என்டரி ஆப்ரேட்டர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது ஆனால் அரசு மருத்துவமனைகளில் சி.ஆர்.எஸ் கணினி டேட்டா என்டரி ஆப்ரேட்டர்களுக்கு நீண்ட நாட்களாக ஊதியம் உயர்த்தப்படவில்லை. அவர்களுக்கும் ஊதியத்தை உயர்த்திவழங்க வேண்டும்

மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி உதவிட மாண்புமிகு அமைச்சர் அவர்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்

சா.அருணன் நிறுவனத் தலைவர் தமிழ்நாடு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

IMG_20230701_212606

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84710401