நாளை தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்காணல்: கலெக்டர் தகவல்
14 ஊராட்சி ஒன்றியங்களில் நாளை தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் நடக்க உள்ளது. இதுகுறித்கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைக்கு 14 ஊராட்சி ஒன்றியங்களில் தற்காலிக அடிப்படையில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு, வெளிச்சந்தை முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.
அமைப்பியல் துறையில் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்து குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு 22ம் தேதி காலை 10 மணிக்கு வெளிச்சந்தை மூலம் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
நேர்காணலில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கல்விச்சான்று, பள்ளி மாற்றுச் சான்று, இருப்பிடச் சான்றுகளான குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றும், 2 ஆண்டுகள் பணி முன் அனுபவச்சான்றிதழ் கணிணி கல்வித்தகுதி, ஓட்டுநர் உரிமம் ஆகிய சான்றுகளுடன் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.