அரசு கல்லூரிகளில் 2ம் கட்ட கலந்தாய்வில் 75% இடங்கள் நிரம்பியது முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நாளை தொடங்குகிறது
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24ம் ஆண்டுக்கான 2ம் கட்ட மாணவர் சேர்க்கையில் 75 சதவீத இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரம்பியுள்ளன. நாளை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்கள் உள்ளன. இதற்கு 3 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். கடந்த மாதம் 29ம் தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு தொடங்கியது. அதனைத் தொடர்ந்து முதல் கட்ட கலந்தாய்வு இம்மாதம் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெற்றது. 2வது கட்ட கலந்தாய்வு 12ம் தேதி தொடங்கி நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது.இந்த வருடமும் பல கல்லூரிகளில் பி.காம்., பி.ஏ., ஆங்கிலம், பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.எஸ்.சி., கணிதம், வேதியியல், இயற்பியல் பாடப்பிரிவுகளுக்கு அதிக போட்டி நிலவியது. 2ம் கட்ட கலந்தாய்வு மூலம் 75 சதவீதத்திற்கும் மேலான இடங்கள் நிரம்பி விட்டன. மீதமுள்ள காலி இடங்களுக்கு உடனே கலந்தாய்வு நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஒரு சில கல்லூரிகளில் முக்கிய பாடப்பிரிவுகள் நிரம்பினாலும் சில பாடப்பிரிவுகள் காலியாக உள்ளன. மேலும் இடஒதுக்கீடு அடிப்படையில் சில கல்லூரிகளில் பாடப்பிரிவுகள் நிரம்பாமல் காலியாக உள்ளன. அந்த இடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதனால் 3வது கட்ட கலந்தாய்வு இன்றும் நடக்கிறது.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை செல்போன் மூலம் நேரில் அழைத்து இடங்களை ஒதுக்க கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரி கல்வி இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது. இட ஒதுக்கீட்டில் உள்ள காலி இடங்கள் மற்றும் இதர காலி இடங்கள் அனைத்தையும் நிரப்ப அரசு கல்லூரி முதல்வர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.மாநிலக் கல்லூரியை பொறுத்தவரை இங்கு உள்ள 1,140 இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பி விட்டன. எஞ்சியுள்ள சில இடங்களும் 3ம் கட்ட கலந்தாய்வு மூலம் நிரம்பி விடும். பி.காம், கணிதம், இயற்பியல், ஆங்கிலம் துறைகளில் மாணவர் சேர்க்கை முழுவதுமாக நிரம்பி விட்டன. முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையில் 400க்கும் அதிகமான மாணவிகள் உள்ளனர். இவர்களில் 200 பேருக்கு மேல் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் வருவார்கள். மேலும் நாளை வரும் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளை வரவேற்று முதல் ஒரு வாரத்துக்கு அவர்களுக்கு தங்கள் பாடங்களை குறித்து அறிவுறுத்தல் வழங்கப்படும். இதனை கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் வெளியில் இருந்து சிறப்பு அழைப்பாளர்கள் மூலம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.* இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறைவு
நேற்று வரை கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை:
மொத்த சேர்க்கை 75,811
ஆண்கள் 31,621
பெண்கள் 44,190
புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உள்ள மாணவிகள் 21,000

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.