மாவட்ட ஆட்சியருடனான அறிமுகக் கூட்டம் 17.06.2023 அன்று நடைபெறுதல் தகவல் தெரிவித்தல் - சார்பு - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள்: 15.06.2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 15, 2023

Comments:0

மாவட்ட ஆட்சியருடனான அறிமுகக் கூட்டம் 17.06.2023 அன்று நடைபெறுதல் தகவல் தெரிவித்தல் - சார்பு - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள்: 15.06.2023

Introductory meeting with District Collector to be held on 17.06.2023 Informative - Dependency - Proceedings of Principal Education Officer - Date: 15.06.2023 - மாவட்ட ஆட்சியருடனான அறிமுகக் கூட்டம் 17.06.2023 அன்று நடைபெறுதல் -தகவல் தெரிவித்தல் - சார்பு.தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்,நாள்-15.06.2023

மாதிரிப் பள்ளி பள்ளிக் கல்வி தூத்துக்குடி மாவட்டம், மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அரசு மாதிரிப் பள்ளியில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டு சேர்க்க - மாவட்ட ஆட்சியருடனான அறிமுகக் கூட்டம் 17.06.2023 அன்று நடைபெறுதல் -தகவல் தெரிவித்தல் - சார்பு.

தூத்துக்குடி மாவட்டம், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டுகளில் சிறச்து விளங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு ஏதுவாக, சிறப்பு திட்டமாக 2023-2024 ஆம் கல்வி ஆண்டு முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்பன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாதிரிப் பள்ளி செயல்படவுள்ளது. இப்பள்ளியில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து இணைப்பில் கண்டுள்ள மாணாக்கர்கள் 11 ஆம் வகுப்பில் உயிரியல் மற்றும் கணினிப் பிரிவில் சேர தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாணாக்கர்களுக்கான அறிமுகக் கூட்டம் 17.06.2023 அன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி V.O.C பொறியியல் கல்லூரியில் வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறவுள்ளது.

அக்கூட்டத்தில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தகவல் தெரிவித்து, அவர்களின் பெற்றோர்களுடன் ஒரு ஆசிரியரையும் அனுப்பி வைக்குமாறு சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு. தேர்வு செய்யப்பட்ட அனைத்து மாணவர்களையும் விருப்பம் இருந்தாலும் / இல்லாவிட்டாலும் கட்டாயம் மாவட்ட ஆட்சியருடனான அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்க செய்வது சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களின் பொறுப்பாகும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews